அறிமுகமானது இ ஆதார் செயலி.. இத்தனை சிறப்பு அம்சங்களா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
UIDAI Introduced e Aadhaar App | இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இ ஆதார் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய செயலியின் மூலம் இ சேவை மையங்களுக்கு சென்று செய்த வேலைகளை ஸ்மார்ட்போன் மூலம் வீட்டில் இருந்தபடியே செய்துக்கொள்ளலாம்.
இந்தியர்களுக்கான மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு (Aadhaar Card) உள்ளது. இந்த நிலையில், ஆதார் கார்டில் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றால் பொதுமக்கள் இ சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும் என்ற தேவை உள்ளது. இந்த நிலையில் தான் பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority of India) இ ஆதார் செயலியை (e Aadhaar App) அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த இ ஆதார் செயலியில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்ன, அதனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இ ஆதார் செயலியை அறிமுகம் செய்த இந்திய தனித்து அடையாள ஆணையம்
பொதுமக்கள் தங்களது ஆதார் சேவைகளை ஸ்மார்ட்போன் மூலமே சுலபமாக பெறும் வகையில் இ ஆதார் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி ஆண்ட்ராய்டு (Android) மற்றும் IOS என் இரண்டிலுமே கிடைக்கிறது. இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் (Google Paly Store) மற்றும் ஆப் ஸ்டோர் (App Store) ஆகிய தளங்களில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இந்த செயலியை பயன்படுத்தும் பட்சத்தில் பயனர்கள் ஆதார் கார்டை தங்களுடன் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
இதையும் படிங்க : ரீச்சார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தும் நிறுவனங்கள்.. பயனர்கள் அதிர்ச்சி!




இ ஆதார் செயலியின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
- இந்த ஆதார் செயலியை வைத்திருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் தங்களுடன் ஆதார் கார்டை எடுக்க செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை.
- இந்த செயலியை பயன்படுத்த பயோமெட்ரிக் (Biometric) விவரங்கள் கட்டாயமாக உள்ளது.
- பயனர்கள் தங்களது ஆதார் கார்டை ஆவணமாக வழங்குவதற்கு பதிலாக இ ஆதார் செயலியில் இருந்து கிஆர் (QR – Quick Response) கோடு அனுப்பலாம்.
- இந்த செயலி மூலம் ஆதார் கார்டில் உள்ள பெயர், வயது, முகவரி ஆகிய விவரங்களை மிக சுலபமாக மாற்றம் செய்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : BNPL மூலம் பொருட்களை வாங்குவது உண்மையில் பாதுகாப்பானது இல்லையா?.. பொருளாதார வல்லுநர்கள் கூறுவதை கேளுங்கள்!
இ ஆதார் செயலியில் ரெஜிஸ்டர் செய்வது எப்படி?
- அதற்கு முதலில் இ ஆதார் செயலியை ஓபன் செய்ய வேண்டும்.
- பிறகு உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை பதிவிட்டு ஆதார் செயலியில் பதிவு செய்ய வேண்டும்.
- பிறகு உங்களது ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்.
- பிறகு உங்களது மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை பதிவிட வேண்டும்.
- பிறகு உங்களது Facial Authentication பதிவு செய்ய வேண்டும்.
- பிறகு உங்களது செயலிக்கு 6 இலக்க பாஸ்வேர்டு செட் செய்து பாதுகாப்பாக பயன்படுத்த தொடங்கலாம்.
இதன் மூலம் பொதுமக்கள் தங்களது ஒவ்வொரு தேவைகளுக்கும் இ சேவை மையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பெரும்பாலான ஆதார் சேவைகளை பெற்றுக்கொள்ளலாம். ஆதாரில் பயோமெட்ரிக் மற்றும் புகைப்படம் மாற்றம் ஆகியவற்றுக்கு இ சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும் என்பது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.