Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Aadhaar Card : ஆதார் சேவையில் வரவுள்ள முக்கிய மாற்றங்கள்.. UIDAI அறிவிப்பு!

UIDAI New Aadhaar Rules 2025 | இந்தியாவில் வசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் கட்டாயமாக உள்ளது. ஆதார் கார்டில் உள்ள விவரங்களும் மிக துல்லியமாக இருக்க வேண்டும். இந்த நிலையில், ஆதார் சேவைகளில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் சில முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

Aadhaar Card : ஆதார் சேவையில் வரவுள்ள முக்கிய மாற்றங்கள்.. UIDAI அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 30 Oct 2025 12:04 PM IST

இந்தியாவில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் ஆதார் கார்டு (Aadhaar Card) கட்டாயமாக உள்ளது. இதேபோல ஆதார் கார்டில் இருக்கும் விவரங்களும் மிக துல்லியமானதாகவும், சரியானதாகவும் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இவ்வாறு இந்தியர்களுக்காக மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ள நிலையில், ஆதார் தொடர்பான சேவைகளை எளிதாக்கும் வகையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority of India) பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஆதார் கார்டு தொடர்பான புதிய விதிகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆதார் கார்டு தொடர்பான புதிய விதிகளை அறிமுகம் செய்யும் UIDAI

ஆதார் கார்டு தொடர்பான இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் புதிய விதிகள் நவம்பர் 1, 2025 முதல் அமலுக்கு வர உள்ளது.

ஆட்டோமெடிக் வெரிஃபிகேஷன்

ஆதார் கார்டு பயனர்கள் ஏற்கனவே சமர்ப்பித்துள்ள பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றில் இருந்து விவரங்களை நேராகவே எடுத்துக்கொள்ளும். இதன் மூலம் தரவுகள் உறுதி செய்யப்படுவது மட்டுமன்றி, தவறுகளையும் தவிர்க்க முடியும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : கேஸ் சிலிண்டர் விலை முதல் வங்கி கணக்கு வரை.. நவம்பர் மாதம் அமலுக்கு வர உள்ள முக்கிய மாற்றங்கள்!

ஆதார் – பான் இணைப்பு கட்டாயம்

டிசம்பர் 31, 2025-க்குள் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஒருவேளை டிசம்பர் 31-க்குள் ஆதார் கார்டை, பான் கார்டுடன் இணைக்கவில்லை என்றால் ஜனவரி 1, 2026 முதல் பான் கார்டு ரத்து செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, புதியதாக பான் கார்டு விண்ணப்பிக்கவும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ரூ.5 லட்சம் முதலீடு செய்து ரூ.8 லட்சம் பெறலாம்.. இந்த பார்முலாவை பயன்படுத்துங்கள்!

ஆதார் சேவைகளுக்கான கட்டணம் உயர்வு

  • பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை மாற்றம் செய்வதற்கான கட்டணம் ரூ.75 ஆக உயர்வு.
  • புகைப்படம், கை ரேகை மற்றும் கண் ரேகை மாற்றம் செய்வதற்கான கட்டணம் ரூ.125 ஆக உயர்வு.
  • ஆவணங்கள் பதிவேற்றம் செய்வதற்கான கட்டணம் ரூ.75 ஆக உயர்வு.
  • ஆதார் கார்டை பிரிண்ட் எடுக்க ரூ.40.

இந்த முக்கிய மற்றும் புதிய விதிகளை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் ஆதார் சேவைகளில் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.