இந்த வங்கி பரிவர்த்தனைகள் குறித்து வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம்!
Bank Transaction Rules | பெரும்பாலான பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் அதிக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில், இந்த சில பரிவர்த்தனைகளை மேற்கொள்வதன் மூலம் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப வாய்ப்புள்ளது. அது என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் (Technology Development) காரணமாக தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டது. முன்னதாக பொதுமக்கள் கையில் பணம் வைத்து செலவு செய்து வந்த நிலையில் தற்போது வங்கி பரிவர்த்தனை, ஏடிஎம் பரிவர்த்தனை, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர். பண பரிவர்த்தனையின் இத்தகைய சிறப்பு அம்சங்கள் உள்ள நிலையில், அவை பரிவர்த்தனையை மிகவும் எளிதாக மாற்றியுள்ளது. இந்த நிலையில், பண பரிவர்த்தனைக்கான சில விதிகள் உள்ளன. அவற்றை மீரும் பட்சத்தில் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பவோ அல்லது விசாரணைக்கு அழைக்கவோ வாய்ப்பு உள்ளது. எனவே அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பண பரிவர்த்தனை குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
பண பரிவர்த்தனை விதிகளை மீறி செயல்படும்போது அது குறித்து வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில், பண பரிவர்த்தனை விதிகள் கூறுவது என்ன என விரிவாக பார்க்கலாம்.
வெளிநாட்டு பண பரிவர்த்தனை
வெளிநாட்டு பயணங்களின் போதோ அல்லது கல்வி உள்ளிட்ட தேவைகளுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் அது குறித்து வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப வாய்ப்புள்ளது. காரணம், வெளிநாட்டில் மேற்கொள்ளப்பட்ட அந்த பண பரிமாற்றம் சட்டப்பூர்வமானதா என்பதை உறுதி செய்வது தான்.




இதையும் படிங்க : Silver Price : தீபாவளிக்கு பிறகு விலை குறையும் வெள்ளி?.. வெளியான முக்கிய தகவல்!
பயன்பாட்டில் இல்லாத கணக்கில் அதிக பண பரிவர்த்தனை
பொதுமக்கள் தங்களது பயன்படுத்தப்படாத கணக்கில் திடீரென அதிக தொகையை பண பரிவர்த்தனை செய்யும்போது அது குறித்து வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப வாய்ப்புள்ளது. காரணம், பயன்படுத்தப்படாத வங்கி கணக்கில் திடீரென அதிக பண பரிவர்த்தனை நடப்பது வருமான வரித்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும்.
மியூச்சுவல் ஃப்ண்ட் வருமானம்
நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருந்து அதன் முதிர்ச்சி தொகை உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டால் அது குறித்து வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும். காரணம், மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்டவற்றில் இருந்து வரும் பணத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும்.
இதையும் படிங்க : கிரெடிட் கார்டை இப்படி பயன்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.. டிப்ஸ் இதோ!
ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள்
பலரும் சம்பளம், வீட்டு செலவு, தனிப்பட்ட செலவு, முதலீடு என பல தேவைகளுக்கு பல வங்கி கணக்குகளை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், அதில் வரும் வட்டி குறித்து பலரும் வருமான வரித்துறைக்கு தெரிவிப்பதில்லை. ஆனால், அந்த தகவல்கள் பான் கார்டு மூலம் வருமான வரித்துறைக்கு தெரிய வந்துவிடும்.