Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்ட்ஸ்களில் இத்தனை சிறப்புகளா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

Benefits of Credit Card Reward Points | தற்போதைய காலக்கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், பெரும்பாலான நபர்களுக்கு கிரெடிட் கார்டில் வழங்கப்படும் ரிவார்டு பாயிண்ட்ஸ்களை எப்படி பயன்படுத்துவது என தெரியாமல் உள்ளது. இந்த நிலையில், ரிவார்டு பாயிண்ட்ஸ்களின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்ட்ஸ்களில் இத்தனை சிறப்புகளா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 24 Oct 2025 12:17 PM IST

இந்தியாவை பொருத்தவரை பெரும்பாலான பொதுமக்கள் கிரெடிட் கார்டுகளை (Credit Card) பயன்படுத்துகின்றனர். ஆனால், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் நபர்கள், பயன்படுத்தா நபர்கள் என பலருக்கும் கிரெடிட் கார்டி என்றாலே மனதில் அச்சம் உருவாகிறது. உண்மையில், கிரெடிட் கார்டு நிதி சுமையை ஏற்படுத்தும் அம்சம் இல்லை. அதனை முறையாக பயன்படுத்தும் பட்சத்தில் அதன் சிறப்பு பலன்களை பெற முடியும். இந்த நிலையில், கிரெடிட் கார்டில் ரிவார்டு பாயிண்ட்ஸ்களை (Reward Points) முறையாக பயன்படுத்தி பயன்பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கிரெடிட் கார்டு ரிவார்ட் பாயிண்ட்ஸ்களை முறையாக பயன்படுத்துவது எப்படி?

கிரெடிட் கார்டு ரிவார்டு பாயின்ஸ்ட்களை முறையாக பயன்படுத்தி பலனை பெறுவது சற்று கடினமானதாக தோன்றலாம். ஆனால், உண்மையில் கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்ட்ஸ்களை பயன்படுத்துவது அவ்வளவு கடினமானது இல்லை. இலவச விமான பயணம், விடுதிகளில் இலவசமாக தங்குவது உள்ளிட்ட பல சேவைகளை இந்த ரிவார்டு பாயிண்ட்ஸ்கள் மூலம் சுலபமாக பெற்றுக்கொள்ள முடியும்.

இதையும் படிங்க : மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டம்.. 8.25% வரை வட்டி வழங்கும் வங்கிகள்!

கிரெடிட் கார்டு பயனர்கள் செய்யும்  மிகப்பெரிய தவறு

கிரெடி கார்டு பயனர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு அவர்கள் தங்களது ரிவார்டு பாயிண்ட்ஸ்களை தொடர்ந்து கவனிக்காமல் உள்ளது தான். பல கிரெடிட் கார்டு பயனர்கள் தங்களுக்கு எவ்வளவு ரிவார்டு பாயிண்ட்ஸ் கிடைக்கிறது என்பதனை கூட தெரியாமல் உள்ளனர். அவர்கள் கிரெடிட் கார்டுகளை வைத்து தங்களது தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்வதையே பெரியதாக கருதும் நிலையில், அதில் இருக்கும் இத்தகைய சிறப்பு பலன்களை கண்டுக்கொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.

இதையும் படிங்க : Gold Price : இந்த நாடுகளில் தங்கம் விலை மிக குறைவு.. எந்த எந்த நாடுகள்?

உங்கள் கிரெடிட் கார்டு குறித்து முழுமையாக தெரிந்துக்கொள்ளுங்கள்

ஒவ்வொரு கிரெடிட் கார்டு தனி சிறப்பு அம்சங்களை கொண்டு இருக்கும். எனவே நீங்கள் எந்த வகை கிரெடிட் கார்டை பயன்படுத்துகிறீர்கள் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். அதுமட்டுமன்றி, உங்கள் கிரெடிட் கார்டில் நீங்கள் ரூ.1 செலவு செய்தால் அதற்கு எத்தனை ரிவார்டு பாயிண்ட் கிடைக்கும் என்பதனை தெரிந்துந்துக்கொள்ளுங்கள். பிறகு ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலவு செய்த தொகைக்கு எவ்வளவு ரிவார்டு பாயிண்ட் வழங்கப்பட்டுள்ளது என்பதனை தெரிந்துக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் முறை எளிதாகவும், பயனுள்ளதாகவும் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.