Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கினால் அபராதம் விதிக்கும் ஐடி?.. இது தான் காரணம்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Income Tax Fine For Getting Money From Friends | பண பரிவர்த்தனைகளுக்கான வரம்பு மற்றும் விதிகளை வருமான வரித்துறை வகுத்து வைத்துள்ளது. அதனை மீறி செயல்படும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பணம் பெற்றாலும் அபராதம் விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கினால் அபராதம் விதிக்கும் ஐடி?.. இது தான் காரணம்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Nov 2025 12:29 PM IST

மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் எதிர்பாராத நேரங்களில் பண தேவை ஏற்படும். இத்தகைய சூழல்களில் பலரும் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் பணம் வாங்கிக்கொள்ளலாம் என நினைக்கின்றனர். காரணம், வங்கிகளிலோ அல்லது நிதி நிறுவனங்களிடமோ கடன் வாங்கும்போது அதற்கு வட்டியுடன் சேர்த்து பணத்தை திருப்பி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். எனவே பலரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பணத்தை வாங்கி ஒருசில நாட்கள் அல்லது மாதங்களில் திரும்ப கொடுத்துவிடலாம் என நினைக்கின்றனர். ஆனால், உண்மை அது அல்ல. நண்பர்கள் அல்லது உறவினர்களிடமும் கூட ரொக்கமான கடன் வாங்கும் பட்சத்தில் உங்களுக்கு வருமான வரித்துறை (Income Tax) அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அது குறித்து கவனமாக இருக்க வேண்டும்.

நண்பர்கள், உறவினர்களிடம் ரொக்கமாக பணம் வாங்கினால் அபராதம்

நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் இருந்து பெரிய அளவில் ரொக்கமாக பணம் பரிமாற்றம் செய்தால் வருமான வரித்துறை அபராதம் விதிக்கலாம் என கூறப்படுகிறது. இந்திய வருமான வரி சட்டத்தின் கீழ் ஒருவர் மற்றொரு நபரிடம் இருந்து ரூ.20,000-க்கு மேல் ரொக்கமாக பணம் வாங்கும் பட்சத்தில் அது சட்ட விரோதமாக கருதப்படும் என கூறப்படுகிறது. உதாரணமாக அதே அளவு தொகை அபராதமாக விதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதனை தவிர்க்க வேண்டும் என்றால் பெரிய தொகைகளை பண பரிவர்த்தனை செய்யும்போது டிஜிட்டல் வழியாக மேற்கொள்வது மிகவும் பாதுகாப்பானதாகவும், அபராதத்தை தவிர்க்க கூடியதாகவும் இருக்கும்.

இதையும் படிங்க : EPFO : இபிஎஃப்ஓவில் Date of Exit தேதியை அப்டேட் செய்வது எப்படி?.. முழு விவரம் இதோ!

ரொக்க பண பரிமாற்றங்களுக்கு அபராதம் ஏன்?

கடன் வாங்குவது, கடனை திருப்பி செலுத்துவது, நன்கொடை வழங்குவது என எதுவாக இருந்தாலும் ரூ.20,000-க்கு மேல் நீங்கள் ரொக்க பண பரிவர்த்தனை மேற்கொண்டால் அதனை வருமான வரித்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனையாக எடுத்துக்கொள்ளும். யாரிடமிருந்தும் ரூ.20,000 அல்லது அதற்கும் மேற்பட்ட தொகையை நீங்கள் ரொக்கமாக பெறும் பட்சத்தில் அதனை டெபாசிட்டாக அல்லது முன்னுரிமை பணமாக எடுக்க முடியாது என்று வருமான வரி சட்டம் 271DA கூறுகிறது. மேலும், அவ்வாறு நீங்கள் ரொக்கமாக பெறும் பணத்தில் அதே அளவுக்கு உங்களுக்கு அபராதம் விதிக்கபடலாம் எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.