முதல்முறை வீடு வாங்கும் நபர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்.. என்ன என்ன தெரியுமா?
Tips for First Time Home Buyers | சொந்த வீடு என்பது பெரும்பாலான பொதுமக்களின் ஆசையாகவும், கனவாகவும் உள்ளது. இந்த நிலையில், முதல் முறை சொந்த வீடு வாங்கும் நபர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் சில உள்ளன. அது குறித்து பார்க்கலாம்.
இந்திய பொதுமக்களை பொருத்தவரை சொந்தமாக வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்பது பெரும்பாலனவர்களின் கனவாக இருக்கும். இதற்காக பலர் மிக கடுமையாக உழைத்து பணத்தை சேமித்து வைத்து தங்களது கனவை நிஜமாக்கிக்கொள்கின்றனர். இன்னும் சிலர் பணத்தை சேமித்து சொந்த வீடு கனவை நிஜமாக்க கால தாமதம் ஏற்படும் என்பதால் வங்கியில் இருந்து கடன் பெற்று தங்களது கனவை நிறைவேற்றிக்கொள்கின்றனர். இந்த நிலையில், புதியதாக வீடு வாங்க அல்லது கட்டப்போகும் நபர்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள சில முக்கிய விஷயங்கள் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சொந்த வீடு வாங்குவது, கட்டுவதற்கு முன்பு தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்
சொந்த வீடு வாங்கும்போதோ அல்லது கட்டும்போதோ இந்த சில விஷயங்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் தேவையற்ற நிதி சிக்கல்களில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படும்.
5 மடங்குகளுக்கு மேல் இருக்க கூடாது
சொந்த வீடு வாங்கும் நபர்கள், தாங்கள் வாங்கும் வீட்டின் மொத்த செலவு தங்களது ஆண்டு வருமானத்தில் 5 மடங்கை தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. உதாரணமாக ஒருவர் ஆண்டு ரூ.5 லட்சம் ஊதியம் பெறுகிறார் என்றால் அவர் சொந்த வீடு வாங்கும்போது ரூ.25 லட்சத்திற்கு மேல் செலவு செய்ய கூடாது. அதனை மீறி செலவு செய்யும் பட்சத்தில் கூடுதல் நிதி சுமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.




இதையும் படிங்க : அரசுக்கு வட்டிக்கு பணத்தை கொடுத்து லாபம் பெறலாம்.. எப்பட.. முழு விவரம் இதோ!
மாத தவணை
பெரும்பாலான நபர்கள் முதல் முறை வீடு வாங்கும்போதோ அல்லது கட்டும்போதோ வங்கியில் கடன் எடுத்து அந்த கடனை மாத தவணை முறையில் அடைக்கும் அம்சத்தை தேர்வு செய்கின்றனர். அவ்வாறு மாத தவணை முறையில் கடன் பெற்று சொந்த வீடு கனவை நிஜமாக்க நினைக்கும் நபர்கள், தாங்கள் செலுத்தும் மாத தவணை தங்களின் மாத வருமானத்தில் 40 முதல் 45 சதவீதத்தை தாண்டாமல் இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
இதையும் படிங்க : Aadhaar Card : ஆதார் சேவையில் வரவுள்ள முக்கிய மாற்றங்கள்.. UIDAI அறிவிப்பு!
வாடகை Vs சொந்த வீடு
வாடகை வீடு சிறந்ததா அல்லது சொந்த வீடு சிறந்ததா என்பது தொடர்பான விவாதம் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. உணமையை சொல்ல வேண்டும் என்றால் சொந்த வீடு தான் சிறந்தது என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். காரணம் வாடகை வீட்டில் இருப்பதன் மூலம் எந்த வித பலன்களையும் பெற முடியாது. ஆனால், சொந்த வீடு என்பது வரும் காலத்திற்கான அசையா சொத்தாக இருக்கும். எனவே சொந்த வீடு வாங்குவதே சிறந்த தேர்வாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.