Home Loan : வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ஆர்பிஐ அசத்தல் அறிவிப்பு!
RBI New Rules on Credit Score | வங்கி மற்றும் அது தொடர்பான அறிவிப்புகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து வருகிறது. அந்த வகையில், வீட்டு கடனில் கிரெடிட் ஸ்கோர் மூலம் மிக முக்கிய மாற்றத்தை ஏற்பட கூடிய புதிய விதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவை பொருத்தவரை எப்படியாவது சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்பது பெரும்பாலான நபர்களின் ஆசையாகவும், கனவாகவும் இருக்கும். இதற்காக பெரும்பாலான பொதுமக்கள் வங்கிகளில் கடன் வாங்கி தங்களது சொந்த வீடு கனவை நிறைவேற்றிக்கொள்கின்றனர். இவ்வாறு வீட்டு கடன் (Housing Loan) வாங்கும்போது அது கிரெடிட் ஸ்கோர் (Credit Score) அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது. பெரும்பாலும் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால் கடன் வழங்கப்படாது. இல்லையென்றால் அதிக வட்டியுடன் கூடிய வீட்டு கடன் வழங்கப்படும். இந்த நிலையில், இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை தான் இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) அறிவித்துள்ளது.
தனிநபர், வீட்டு கடன்களில் முக்கிய பங்கு வகிக்கும் கிரெடிட் ஸ்கோர்
நீங்கள் வங்கிகளில் கடன் வாங்கும்போது உங்களது கிரெடிட் ஸ்கோர் குறைவாக உள்ளது, இதுவே நீங்கள் கடன் வாங்கிய சில மாதங்களுக்கு பிறகு அது சரியான அளவை அடைந்துவிடுகிறது என்றாலும் வங்கிகள் கடன்களுக்கான வட்டியை குறைக்காமல் உள்ளன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தான் தற்போது ஆர்பிஐ இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இனி வங்கிகள் கடன் வாங்கிய நபரின் கிரெடிட் ஸ்கோர் இடைப்பட்ட காலத்திற்குள் அதிகரிக்கும் பட்சத்தில் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஆர்பிஐ உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க : ரூ.5 லட்சம் முதலீடு செய்து ரூ.8 லட்சம் பெறலாம்.. இந்த பார்முலாவை பயன்படுத்துங்கள்!




இது குறித்து கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்
நீங்கள் வீட்டு கடன் வாங்கும்போது புளோடிங் ரேட் வட்டி (Floating Rate) விகிதத்தில் கடன் வாங்கி இருந்தால் நிச்சயம் உங்களால் ஆர்பிஐ-ன் இந்த புதிய விதி மூலம் உங்களது கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க முடியும். புளோடிங் ரேட் வட்டி விகிதத்தை பொருத்தவரை நாம் வாங்கும் கடன் இரண்டு பிரிவுகளை கொண்டு கணக்கிடப்படும். ஒன்று ரெப்போ வட்டி (Repo Rate) விகிதம் மற்றொன்று ஸ்பிரெட் (Spread) எனப்படும் வட்டி விகிதம்.
இதையும் படிங்க : வங்கி கணக்கிற்கு இனி 4 நாமினிகளை நியமிக்கலாம்.. நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதி!
இந்த முறையை பயன்படுத்தி ரெப்போ வட்டி விகிதத்துடன் கடன் வாங்கும் நபரின் கிரெடிட் ஸ்கோர், வங்கி மார்ஜின், கடன் திரும்ப செலுத்தும் காலம் ஆகியவற்றை கொண்டு வட்டியை நிர்ணயம் செய்வார்கள். இந்த முறை தான் ஸ்பிரெட் என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்பிரெட் வட்டியை பொருத்தவரை வங்கிகள் 3 ஆண்டுகளுக்கு எந்த மாற்றமும் செய்யாது. இந்த லாக் இன் காலத்தை தான் தற்போது ஆர்பிஐ மாற்றி அமைத்துள்ளது. இந்த விதி அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.