Gold : லாபகரமான முறையில் தங்கம் நகை வாங்குவது எப்படி?.. இத ஃபாலோ பண்ணுங்க!
Buy Gold Profitably and Safely | தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் சாமானிய மக்களுக்கு எட்டா கணியாக தங்கம் மாறிவிடுமோ என்ற அச்சம் உள்ளது. இந்த நிலையில், லாபகரமான முறையில் தங்கம் வாங்குவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் (Gold Price) மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்திற்கு நெருங்கி விற்பனை செய்யப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு தங்கள் விலை ஒரு சவரன் ரூ.1.5 லட்சத்தை நெருங்கும் வாய்ப்பு உள்ளதாகவும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். தங்கம் இத்தகைய கடுமையான விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், எதிர்காலத்தில் தங்கம் வாங்குவது குறித்து சாமானிய மக்கள் யோசித்து கூட பார்க்க முடியாத நிலை ஏற்படுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. இந்த நிலையில், கடும் விலை உயர்வுக்கு மத்தியிலும் பாதுகாப்பாகவும், லாபகரமாகவும் தங்கம் வாங்குவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மொத்தமாக பணம் செலுத்தி தங்க நகை வாங்குவதில் உள்ள சிக்கல்கள்
தங்கம் விலை உச்சத்தில் உள்ளது, தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றாலும் குறைந்தது ரூ.1,20,000 செலவாகும். இன்று (அக்டோபர் 25, 2025) ஒரு சவரன் தங்கம் ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இதே விலைக்கு தங்கத்தை வாங்க முடியாது. காரணம், தங்க ஆபரணங்களை வாங்கும்போது அதற்கு 20 சதவீதம் செய்கூலி விதிக்கப்படும். அதாவது சுமார் 15,000 வரை நீங்கள் வாங்கும் தங்க நகைக்கு செய்கூலி வழங்க வேண்டும். இதுதவிர சேதாரம், ஜிஎஸ்டி ஆகிவை விதிக்கப்படும். இதன் காரணமாக ரூ.92,000 மதிப்பிலான தங்க நகையை வாங்க ரூ.1,10,000 முதல் ரூ.1,20,000 வரை செலவாகும்.
இதையும் படிங்க : Gold Price : ஒரே நாளில் சர்வதேச அளவில் சரிவை சந்தித்த தங்கம்.. வெள்ளியும் வீழ்ச்சி அடைந்தது!




லாபகரமான முறையில் தங்கம் நகை வாங்குவது எப்படி?
நகைக்கடைக்கு சென்று நேரடியாக பணத்தை கொடுத்து நகை வாங்குவது அதிக பணத்தை செலுத்த வழிவகுக்கும். இந்த நிலையில் தான் நகைக்கடைகள் வழங்கும் சீட்டு வசதி ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது. இந்த திட்டத்தில் பொதுமக்கள் 11 மாதங்கள் பணம் செலுத்த வேண்டும். பிறகு 12வது மாதத்தில் தாங்கள் செலுத்திய பணத்துக்கான தங்க நகையை பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் பணம் செலுத்தி நகை வாங்கும் பட்சத்தில் செய்கூலியில் தள்ளுபடி வழங்கப்படும். இதன் மூலம் கனிசமான தொகையை சேமிக்க முடியும். இதுதவிர மொத்தமாக பணத்தை செலுத்தி நகை வாங்குவது நிதி சுமையை உண்டாக்கும். ஆனால், மாதம் மாதம் பண செலுத்தி நகை வாங்குவது சற்று எளிதானதாக தோன்றும்.
இதையும் படிங்க : இந்த வங்கி பரிவர்த்தனைகள் குறித்து வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம்!
தங்கம் விலை ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும். இந்த நிலையில், ஒரு மாதத்தில் எந்த தினத்தில் தங்கம் விலை குறைவாக உள்ளதோ அன்றைய தினம் பணம் செலுத்தலாம். இவ்வாறு பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள இந்த நகை சீட்டு திட்டத்தில் முதலீடு செய்வது சிறந்த பலன்களை பெற உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.