Bank Holiday : நவம்பர் மாதம் 10 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!
November 2025 Bank Holidays List | ஒவ்வொரு மாதமும் திருவிழாக்கள், பண்டிகைகள் ஆகியவற்றின் காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படும். அந்த வகையில் நவம்பர் மாதம் மொத்தம் 10 நாட்கள் வங்கிகள் செயல்படாது என தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
ஒவ்வொரு மாதமும் பண்டிகைகள், திருவிழாக்கள் ஆகியவற்றுக்காக சில நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை (Bank Holiday) வழங்கப்படும். 2025, அக்டோபர் மாதம் நிறைவடைய உள்ள நிலையில், இன்னும் ஒருசில நாட்களில் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. நவம்பர் மாதத்தில் 10 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நவம்பர் மாதத்தில் எந்த எந்த நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நவம்பர் மாதத்தில் எந்த எந்த நாட்கள் வங்கிகள் செயல்படாது
நவம்பர் மாதத்தில் மொத்தம் 10 நாடகள் வங்கிகள் செயல்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது.
நவம்பர் 1, 2025 – கன்னட மாநில தினம் என்பதால் பெங்களூரில் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.




நவம்பர் 02, 2025 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 05, 2025 – குருநானக் ஜெயந்தி என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 07, 2025 – வாங்கலா திருவிழா என்பதால் ஷில்லாங் பகுதியில் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 08, 2025 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 09, 2025 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 16, 2025 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 22, 2025 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 23, 2025 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 30, 2025 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்ட்ஸ்களில் இத்தனை சிறப்புகளா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
வங்கிகள் செயல்படாத நாட்களில் என்ன செய்ய வேண்டும்?
2025, நவம்பர் மாதத்தில் மொத்தம் 10 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு நிலையில், அதற்கு ஏற்ப உங்கள் வங்கி தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளுங்கள். இதுதவிர அனைத்து நாட்களிலும் வங்கிகளின் பிற சேவைகளான ஏடிஎம் (ATM – Automated Teller Machine), ஆன்லைன் பேங்கிங் (Online Banking) மற்றும் யுபிஐ (UPI – Unified Payment Interface) செயலிகள் பயன்பாட்டில் இருக்கும். அவற்றின் மூலம் உங்களது பண பரிவர்த்தனை தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.