Silver ETF : மீண்டும் முதலீட்டிற்கு திறக்கப்பட்ட வெள்ளி ETFகள்.. அதுவும் சலுகையுடன்!
Silver ETFs Reopen for Investment | வெள்ளி விலை வரலாறு காணாத உச்சத்தில் இருந்த நிலையில், தற்போது உலக சந்தையில் வெள்ளியின் தேவை தணிந்துள்ளது. இதன் காரணமாக வெள்ளி விலை சரிவை சந்தித்து வருகிறது. இந்த நேரத்தில் மீண்டும் வெள்ளி இடிஎஃப்கள் முதலீட்டுக்காக திறப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக உலக அளவில் வெள்ளி விலை (Silver Price) மிக கடுமையான உச்சத்தில் இருந்தது. இந்தியாவில் ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் காரணமாக வெள்ளியும், தங்கத்தை போல் எட்டா கணியாக மாறிவிடுமோ என்ற சூழல் உருவாகியது. ஆனால், தீபாவளி பண்டிகைக்கு பிறகு நிலமை தலைகீழாக மாறியுள்ளது. அதாவது வெள்ளி விலை மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. தீபாவளிக்கு பிறகு வெள்ளி விலை தொடர் சரிவை சந்தித்து வந்த நிலையில் தற்போது ஒரு கிராம் ரூ.170-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளி இடிஎஃப்கள் (ETF – Exchange Traded Fund) மீண்டும் முதலீட்டுக்காக திறக்கப்பட்டுள்ளன.
மீண்டும் முதலீட்டுக்காக திறக்கப்பட்ட வெள்ளி இடிஎஃப்கள்
உலக சந்தையில் வெள்ளியின் தேவை அதிகரித்த நிலையில், வெள்ளி விலை மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வந்தது. இந்த நிலையில், தற்போது உலக சந்தைகளில் வெள்ளியின் பற்றாக்குறை தணித்துள்ளது. இதன் காரணமாக வெள்ளி விலை மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக, அக்டோபர் 22, 2025 அன்று சர்வதேச அளவில் வெள்ளி விலை 8.7 சதவீதம் சரிவை சந்தித்தது.
இதையும் படிங்க : Gold : லாபகரமான முறையில் தங்கம் நகை வாங்குவது எப்படி?.. இத ஃபாலோ பண்ணுங்க!




தங்க இடிஎஃப்களை போலவே வெள்ளி இடிஎஃப்களும் முதலீடு செய்வதற்காக இருந்தன. இதற்கு இடையே தங்கம் விலை கடுமையான உயர்வை சந்தித்த நிலையில், அக்டோபர் 14, 2025 முதல் வெள்ளி இடிஎஃப்கள் நிறுத்தம் செய்யப்பட்டன. தற்போது வெள்ளி விலை மீண்டும் சரிவை சந்தித்துள்ள நிலையில், இந்த வெள்ளி இடிஎப்ஃகள் மீண்டும் முதலீட்டுக்காக திறப்பட்டுள்ளன.
வெள்ளி இடிஎஃப் முதலீடு என்றால் என்ன?
வெள்ளி இடிஎஃப் என்பது பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யும் வெள்ளி அல்லது வெள்ளி தொடர்பான கருவிகளின் இயர்பியல் வடிவத்தில் முதலீடு செய்யும் ஒரு நிதியாகும். இந்த இடிஎஃப்கள் பங்குகளை போலவே வாங்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வெள்ளி இடிஎஃப்களின் மதிப்பு அன்றைய தினத்தில் வெள்ளியின் மதிப்பு என்னவாக உள்ளதோ அதனை பொருத்ததாக இருக்கும்.
இதையும் படிங்க : கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்ட்ஸ்களில் இத்தனை சிறப்புகளா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
கோடக் மியூச்சுவல் ஃபண்ட், ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவை வெள்ளி விலை சரிவை சந்தித்த பிறகு வெள்ளி இடிஎஃப்களை மீண்டும் திறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.