PAN Card : உங்கள் பான் கார்டு முடக்கப்படலாம்.. உடனே இத பண்ணுங்க!
Do This To Avoid PAN Card Deactivation | இந்தியாவில் வங்கி கணக்கு வைத்து அதன் மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் அனைவருக்கும் பான் கார்டு கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், இந்த ஒரு விஷயத்தை செய்யாமல் இருப்பதன் மூலம் பான் கார்டு ரத்து செய்யப்படும்.
இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆவணமாக உள்ளது தான் பான் கார்டு (PAN Card). வங்கி கணக்கு (Bank Account) தொடங்குவது, பண பரிவர்த்தனை (Money Transaction) செய்வது, வருமான வரி தாக்கல் (Income Tax Filing) செய்வது என பல விஷயங்களுக்கு பான் கார்டு கட்டாயமாக உள்ளது. குறிப்பாக பான் கார்டு இல்லை என்றால் இந்த வேலைகளை எல்லாம் செய்து முடிக்க முடியாத சூழல் தான் உள்ளது. பான் கார்டு இத்தகைய முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ள நிலையில், அதில் ஒரு விஷயத்தை செய்ய தவறுவதன் மூலம் உங்கள் பான் கார்டு முடக்கம் செய்யப்படுவதற்காக வாய்ப்பு உள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும்
பான் கார்டை ஆதார் கார்டுடன் (Aadhaar Card) இணைக்க டிசம்பர் 31, 2025 கடைசி தேதியாக உள்ளது. ஒருவேளை பான் கார்டு பயன்படுத்தும் நபர்கள் இந்த தேதிக்குள் தங்களது பான் கார்டை, ஆதார் கார்டுடன் இணைக்கவில்லை என்றால் ஜனவரி 1, 2026 முதல் அவர்களது பான் கார்டு ரத்து செய்யப்படும். எனவே உங்களது பான் கார்டு ரத்து செய்யப்படாமல் இருக்க உடனடியாக உங்களது பான் கார்டை, ஆதார் கார்டுடன் இணைந்துவிடுங்கள்.
இதையும் படிங்க : வங்கி முதல் ஆதார் வரை.. நவம்பர் மாதம் இதெல்லாம் மாறுது.. தெரிஞ்சுக்கோங்க!




பான் கார்டுடன், ஆதாரை இணைப்பது எப்படி?
- அதற்கு முதலில் வருமான வரித்துறையின் e-filing இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- பிறகு அங்கு கொடுக்கப்பட்டுள்ள லிங் ஆதார் (Link Aadhaar) என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
- பிறகு உங்களது 10 இலக்க பான் எண் மற்றும் 12 இலக்க ஆதார் எண் ஆகியவற்றை பதிவிட வேண்டும்.
- பிறகு பான் மற்றும் ஆதார் கார்டை இணைப்பதற்கான கட்டணம் ரூ.1,000 செலுத்த வேண்டும்.
- பிறகு உங்களது கோரிக்கையை சமர்ப்பியுங்கள். பிறகு உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும்.
இதையும் படிங்க : அரசுக்கு வட்டிக்கு பணத்தை கொடுத்து லாபம் பெறலாம்.. எப்பட.. முழு விவரம் இதோ!
லிங்க் செய்யப்பட்டுவிட்டதா? – தெரிந்துக்கொள்வது எப்படி?
- பான், ஆதார் லிங் செய்த அதே இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் (Link Aadhaar Status) என இருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் உங்களது பான் மற்றும் ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்.
பிறகு உங்களது பான் மற்றும் ஆதார் கார்டு இணைக்கப்பட்டுவிட்டதா என்பது குறித்து உங்களால் தெரிந்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.