Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பெண்களுக்கு அதிக லாபத்தை தரும் அசத்தல் திட்டங்கள்.. லிஸ்ட் இதோ!

Profitable Savings Schemes for Women | பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், பெண்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் லாபம் பெறுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

பெண்களுக்கு அதிக லாபத்தை தரும் அசத்தல் திட்டங்கள்.. லிஸ்ட் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Oct 2025 21:59 PM IST

தற்போதைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்திலும் அவர்கள் உறுதியாக இருக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. குறிப்பாக பெண்கள் தங்களது குடும்ப மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக பொருளாதார நிலைத்தன்மையை உருவாக்கிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அதன்படி, பெண்களுக்கு நிதி இழக்கும் அபாயம் இல்லாத, நல்ல லாபத்தை கொடுக்க கூடிய சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அவற்றில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெறலாம். இந்த நிலையில், அவை என்ன என்ன திட்டங்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெண்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டங்கள்

பெண்களுக்கு பாதுகாப்புடன் நல்ல லாபத்தை கொடுக்க கூடிய சில சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அவற்றை குறித்து விரிவாக பார்க்கலாம்.

நிலையான வைப்பு நிதி திட்டம்

நிலையான வைப்பு நிதி பெண்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் மிகவும் சிறந்த திட்டமாக உள்ளது. காரணம் இந்த திட்டத்தில் நிதி இழப்பு அபாயம் மிக குறைவாக உள்ளது. அதுமட்டுமன்றி, இந்த திட்டங்களுக்கு சிறந்த வட்டியும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இது பெண்களுக்கான உகந்த திட்டங்களில் ஒன்றாக உள்ளது.

இதையும் படிங்க : வங்கி கணக்கிற்கு இனி 4 நாமினிகளை நியமிக்கலாம்.. நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதி!

தங்க சேமிப்பு

தங்கத்தையும் இந்திய பெண்களையும் பிரிக்கவே முடியாது. தங்கம் என்பது எப்போது மதிப்பு குறையாத ஒரு உலோகமாக உள்ளது. தங்கத்தை சிறுக சிறுக சேமித்து வைக்கும் பட்சத்தில் அதன் மூலம் பெரிய லாபம் பெற வாய்ப்பு உள்ளது. எனவே பணத்தை முதலீடு செய்ய விரும்பும் பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம், தங்கத்தை நேரடியாக பணம் கொடுத்து வாங்காமல் நகை கடைகள் வழங்கும் திட்டங்களில் இணைந்து தங்கத்தை வாங்குவது லாபரகமாக இருக்கும்.

இதையும் படிங்க : Gold : லாபகரமான முறையில் தங்கம் நகை வாங்குவது எப்படி?.. இத ஃபாலோ பண்ணுங்க!

அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்

சாமானிய மக்களின் நிதி பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் அரசு அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களுக்கு சிறந்த வட்டி வழங்கப்படும் நிலையில், அவை நிதி பாதுகாப்பு கொண்ட திட்டங்களாகவும் உள்ளன.

இந்த மேற்குறிப்பிட்ட திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் பெண்கள் அதிக அளவு லாபம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.