Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Aadhaar : இனி ஆதாரில் மிக சுலபமாக பெயர், பிறந்த தேதியை மாற்றலாம்.. விரைவில் வரும் இ ஆதார் செயலி!

e Aadhaar App Coming Soon | ஆதாரில் பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்டவற்றை மாற்றம் செய்ய பயனர்கள் இ சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், பயனர்கள் வீட்டில் இருந்தபடியே விவரங்களை மாற்றம் செய்ய இ ஆதார் சேவை விரைவில் அறிமுகமாக உள்ளது.

Aadhaar : இனி ஆதாரில் மிக சுலபமாக பெயர், பிறந்த தேதியை மாற்றலாம்.. விரைவில் வரும் இ ஆதார் செயலி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 03 Nov 2025 12:02 PM IST

இந்தியாவில் வாழும் இந்திய குடிமக்களுக்கான மிக முக்கியமான மற்றும் கட்டாய அவணமாக உள்ளது தான் ஆதார் கார்டு (Aadhaar Card). ஒருவர் இந்திய குடிமகன் என்பதை உறுதி செய்ய இந்த ஆதார் கார்டு உள்ளது. அதார் கார்டில் மேலும் சில முக்கிய ஆவணங்களுடன் இணைக்கப்பட்டு இருப்பதால் அதில் இருக்கும் விவரங்கள் மிக துல்லியமாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இதற்காக ஆதார் விவரங்களை திருத்த பொதுமக்கள் ஒவ்வொரு முறையும் இ சேவை மையங்களை நாட வேண்டிய நிலையில், பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை மிக எளிதாக திருத்தும் வகையில் விரைவில் இ ஆதார் செயலி அறிமுகமாக உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இ ஆதார் செயலியில் முக்கிய பங்கு என்ன?

தற்போதைய சூழலில் ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை மாற்றம் அல்லது திருத்தம் செய்ய வேண்டும் என்றால் இ சேவை மையங்களுக்கு சென்று ஆவணங்களை சமர்பிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. இது நேரத்தை விரயமாக்கும் செயலாக உள்ளதாக பயனர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். இந்த நிலையில் தான் பயனர்கள் மிக விரைவாகவும், எளிதாகவும் சேவையை பெறும் வகையில் இந்த இ ஆதார் செயலியை (e Aadhaar App) அறிமுகம் செய்ய இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority of India) நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த இ ஆதார் செயலி மூலம் வீட்டில் இருந்தபடியே மிக சுலபமாக ஸ்மார்ட்போன் மூலம் ஆதார் விவரங்களில் மாற்றம் செய்ய முடியும்.

இதையும் படிங்க : Fastag : ஃபாஸ்டேக் கேஒய்சி-ல் வந்த முக்கிய மாற்றம்.. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு!

விரைவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்

இந்த இ ஆதார் செயலி அங்கீகரிக்கப்பட்ட அரசு தரவு தளங்களுடன் இணைக்கப்பட்டு செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்டவை தானாகவே சரிப்பார்க்கப்படும். இந்த நிலையில், ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்காது. இந்த செயல்முறையின் மூலம் பிழைகள் மற்றும் மோசடிகள் பெருமளவு தடுக்கப்படும்.

இதையும் படிங்க : வங்கி முதல் ஆதார் வரை.. நவம்பர் மாதம் இதெல்லாம் மாறுது.. தெரிஞ்சுக்கோங்க!

எப்போது அமலுக்கு வரும்

இந்த இ ஆதார் செயலி இறுதிகட்ட பணிகளை எட்டியுள்ளது. இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த செயலி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.