Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Fastag : ஃபாஸ்டேக் கேஒய்சி-ல் வந்த முக்கிய மாற்றம்.. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு!

FASTag KYC Simplified | கார், வேன் ஆகிய வாகனங்கள் மூலம் எல்லை தாண்டி பயணம் செய்யும் மக்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில் ஃபாஸ்டேக் கேஒய்சி முறையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

Fastag : ஃபாஸ்டேக் கேஒய்சி-ல் வந்த முக்கிய மாற்றம்.. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Nov 2025 16:39 PM IST

ஃபாஸ்டேக் (Fastag) பயன்படுத்தும் வாகனங்களின் தகவல்களை சரிபார்க்கும் வகையில் KYC (Know Your Customer) நடைமுறையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority) அறிமுகம் செய்தது. இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், கேஒய்சியில் முக்கிய மாற்றம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் ஃபாஸ்டாக் பயனர்கள் தங்களது கணக்குக்கான கேஒய்சி செயல்முறையை மிக எளிதாக செய்து முடிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேஒய்சி செய்முறை குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஃபாஸ்டேகில் கேஒய்சியை அறிமுகம் செய்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

ஃபாஸ்டேக் பயன்படுத்தும் வாகனங்களின் தகவல்களை சரிபார்த்தும் விதமாக கேஒய்சி அம்சத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகம் செய்தது. அதுமட்டுமன்றி, கேஒய்சி செய்யாத கணக்குகளின் ஃபாஸ்டாக் பயன்பாடு நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. இதன் காரணமாக ஃபாஸ்டாக் பயனர்கள் கடும் குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில், ஃபாஸ்டாக் கேஒய்சி செய்வதில் நடைமுறை சிக்கல்கள், தொழில்நுட்ப பிரச்னை என பல்வேறு சிரமங்கள் இருப்பதாக பயனாளர்கள் தரப்பில் இருந்து தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.

இதையும் படிங்க : Aadhaar Card : ஆதார் சேவையில் வரவுள்ள முக்கிய மாற்றங்கள்.. UIDAI அறிவிப்பு!

கேஒய்சி நடைமுறையை எளிமையாக்கிய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

பயனர்கள் இத்தகைய சிக்கல்களை எதிர்கொண்டு வந்த நிலையில், தகவல்களை சரிபார்க்கும் கெஒய்சி முறையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எளிமைப்படுத்தியுள்ளது. அதாவது, பயனர்கள் எளிதான முறையில் கேஒய்சி செய்ய வேண்டும் என்பதற்காக கார், ஜீப் மற்றும் வேக் ஆகிய வாகனங்களின் பக்கவாட்டு புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Home Loan : வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ஆர்பிஐ அசத்தல் அறிவிப்பு!

இதன் காரணமாக கேஒய்சி செய்யும்போது நம்பர் பிளேட் மற்றும் ஃபாஸ்டேக் உடன் கூடிய முன் பக்க புகைப்படத்தை மட்டும் இணையத்தில் பதிவேற்றம் செய்தால் போதும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேஒய்சி சரிபார்ப்புக்கு முன்பு விநியோகம் செய்யப்பட்ட ஃபாஸ்டேக்குகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

கேஒய்சிக்கு அவகாசம் வழங்கப்படும்

வாகனங்களின் புகைப்படங்களை பதிவேற்றாவிட்டால் ஃபாஸ்டேக் கணக்கு முடக்கப்படாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கேஒய்சி சரிபார்ப்புக்கு போதிய அவகாசம் வழங்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.