Gold Price : சற்று விலை குறைந்த தங்கம்.. தற்போது முதலீடு செய்யலாமா?.. பொருளாதார வல்லுநர்கள் கூறுவது என்ன?
Is It Right Time to Invest in Gold | தங்கம் ஒரு சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. இதன் காரணமாக பலரும் தங்களது பணத்தை தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கம் உச்சத்தில் இருந்த நிலையில் தற்போது சரிவை சந்தித்துள்ளது.
தங்கம் விலை (Gold Price) கடந்த சில நாட்களுக்கு முன்பு மிக கடுமையான உச்சத்தில் இருந்த நிலையில், தற்போது சற்று சரிவை சந்தித்துள்ளது. அதாவது ஒரு சவரன் ரூ. 1 லட்சம் வரை நெருங்கி விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம் தற்போது ரூ.90,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் சற்று விலை குறைவை அடைந்துள்ளாது. என்னதான் தங்கம் விலை குறைந்து இருந்தாலும், தங்கம் விலை மீண்டும் உயருமா?, தற்போது தங்கத்தில் முதலீடு செய்வது சரியானதாக இருக்குமா என்றெல்லாம் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் உள்ளது. இந்த நிலையில், தற்போதைய சூழலில் தங்கத்தில் முதலீடு செவது பாதுகாப்பானதா எனப்து குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடுமையான உயர்வுக்கு பிறகு சற்று குறைந்த தங்கம் விலை
தங்கத்தில் விலை ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும். இதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தங்கம் வரலாறு காணாத உச்சத்தில் இருந்தது. அதாது, ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை எட்டும் அளவு இருந்தது. கடைசியாக அக்டோபர் 21, 2025 அன்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12,180-க்கும், ஒரு சவரன் ரூ,97,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க : Aadhaar Card : ஆதார் சேவையில் வரவுள்ள முக்கிய மாற்றங்கள்.. UIDAI அறிவிப்பு!




இதன் காரணமாக விரைவில் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டிவிடும் என்றும், இதன் காரணமாக தங்கம் சாமானிய மக்களுக்கு எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற அச்சம் இருந்தது. இந்த நிலையில் தான் நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அக்டோபர் 22, 2025 அன்று தங்க சர்வதேச அளவில் கடுமையான விலை சரிவை சந்தித்தது. குறிப்பாக அன்றைய தினம் சர்வதேச சந்தையில் தங்கம் 6.3 சதவீதம் சரிந்தது.
சிறிய அளவிலான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம்
| வ.எண் | தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 1 | அக்டோபர் 23, 2025 | ரூ.11,500 | ரூ.92,000 |
| 2 | அக்டோபர் 24, 2025 | ரூ.11,400 | ரூ.91,200 |
| 3 | அக்டோபர் 25, 2025 | ரூ.11,500 | ரூ.92,000 |
| 4 | அக்டோபர் 26, 2025 | ரூ.11,500 | ரூ.92,000 |
| 5 | அக்டோபர் 27, 2025 | ரூ.11,450 | ரூ.91,600 |
| 6 | அக்டோபர் 28, 2025 | ரூ.11,075 | ரூ.88,600 |
| 7 | அக்டோபர் 29, 2025 | ரூ.11,325 | ரூ.90,600 |
| 8 | அக்டோபர் 30, 2025 | ரூ.11,300 | ரூ.90,400 |
| 9 | அக்டோபர் 31, 2025 | ரூ.11,300 | ரூ.90,400 |
| 10 | நவம்பர் 01, 2025 | ரூ.11,310 | ரூ.90,400 |
தங்கம் விலை அக்டோபர் 22, 2025-க்கு பின்னர் சற்று லேசான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அக்டோபர் 28, 2025 அன்று தங்கம் விலை மிக குறைவாக விற்பனை செய்யப்பட்டது. அதாவது அன்றைய தினம் ஒரு கிராம் 22 கார்ட் தங்கம் ரூ.11,075-க்கும், ஒரு சவரன் ரூ.88,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறிய அளவிலான விலை ஏற்ற, இறக்கங்களை தங்கம் சந்தித்து வருகிறது. அக்டோபர் 28, 2025 முதல் இன்று (நவம்பர் 1, 2025) வரை தங்கம் ரூ.91,000-த்தை தாண்டாமல் உள்ளது.
இதையும் படிங்க : Home Loan : வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ஆர்பிஐ அசத்தல் அறிவிப்பு!
தங்கம் சரிவை சந்தித்த காரணம் என்ன?
ரஷ்யா – உக்ரைன் போர் உள்ளிட்ட உலக நாடுகளில் நிலவிய அசாதாரன சூழல், அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை, தங்கத்தின் நுகர்வு அதிகரித்தல் ஆகியவற்றின் காரணமாக தங்கம் கடும் உச்சத்தில் இருந்தது. ஆனால், தற்போது உலக நாடுகள் மத்தியில் அமைதி நிலவுவது, தங்கத்தின் நுகர்வு குறைந்துள்ளது ஆகியவை இணைந்து தங்கம் விலை கடும் சரிவை சந்திக்க முக்கிய காரணிகளாக மாறியுள்ளன. இதன் காரணமாகவே கடந்த சில நாட்களில் தங்கம் பெரிய அளவில் விலை உயர்வு இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : பெண்களுக்கு அதிக லாபத்தை தரும் அசத்தல் திட்டங்கள்.. லிஸ்ட் இதோ!
கடும் உச்சியில் இருந்த தங்கம் தற்போது சற்று விலை குறைந்து விற்பனை செய்யப்படும் நிலையில், தங்கம் விலை மீண்டும் குறையுமா, தற்போதைய சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா என்பது தொடர்பான பல சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழ தொடங்கியுள்ளன. இந்த நிலையில் தான் பொருளாதார வல்லுநர்கள் இது குறித்து சில கருத்துக்களை முன் வைக்கின்றனர்.
காலத்திற்கு ஏற்ப பகுதி முதலீடு செய்ய வேண்டும்
அதாவது தங்கம் எப்போதுமே பாதுகாப்பான முதலீடாக இருக்கும் என்றும், அதில் முதலீடு செய்வது பாதுகாப்பான லாபத்தை பெற உதவும் என்றும் கூறுகின்றனர். ஆனால், தங்கத்தில் முழுவதுமாக முதலீடு செய்யாமல் காலத்திற்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக இருக்கும் என கூறுகின்றனர். தங்கத்தின் விலையை பொருத்தவரை, தற்போது சுமூகமான சூழல் நிலவுவதால் தங்கம் விலை சீராக உள்ளதாகவும், மீண்டும் உலக அளவில் ஏதேனும் சிக்கல் ஏற்படும் பட்சத்தில் இதில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். எனவே காலத்திற்கு ஏற்க குறிப்பிட்ட அளவு பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வது சிறப்பானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.