Gold Price : கடும் சரிவை சந்தித்த தங்கம் விலை.. மேலும் குறையுமா?
Gold Price Will Continue to Drop | கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கம் கடும் உச்சத்தில் இருந்தது. இதன் காரணமாக தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டும் நிலை இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக தங்கம் சரிவை சந்தித்து வருகிறது.
 
                                தங்கம் விலை (Gold Price) கடந்த சில நாட்களுக்கு முன்பு வரலாறு காணாத உச்சத்தில் இருந்தது. இதன் காரணமாக தங்கம் சாமானிய மக்களுக்கு எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் தான் தங்கம் சரிவை சந்திக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் சரிவை சந்தித்து வருவது சாமானிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய ஒன்றாக இருந்தாலும், தங்கம் விலை மேலும் குறையுமா அல்லது மீண்டும் உயர்வை அடையுமா என பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில், இனி வரும் காலங்களில் தங்கம் விலை மேலும் குறையுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடும் சரிவை சந்தித்த தங்கம் விலை
தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு கடும் உச்சத்தில் இருந்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் ரூ.97,000 வரை விற்பனை செய்யப்பட்டது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டும் என்ற அச்சம் ஏற்பட்டது. இதனால் இனி வரும் காலங்களில் தங்கம் வாங்கவே முடியாத சூழல் ஏற்பட்டு விடுமோ என சாமானியர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் தான் நகை பிரியர்கள் மற்றும் சாமானிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தங்கம் விலை சரிவை கண்டது. அதாவது அட்கோபர் 22, 2025 அன்று தங்கம் சர்வதேச சந்தையில் கடும் வீழ்சி அடைந்தது. அதாவது ஒரே நாளில் மட்டும் தங்கம் 6.3 சதவீதம் சரிந்தது. அதனை தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருகிறது.
இதையும் படிங்க : பெண்களுக்கு அதிக லாபத்தை தரும் அசத்தல் திட்டங்கள்.. லிஸ்ட் இதோ!




தங்கம் விலை மேலும் குறையுமா?
தற்போது உலக அரசியலில் பதற்றமில்லாத சூழல் நிலவுகிறது. இதுதவிர உலக சந்தையில் தங்கத்தின் நுகர்வு குறைந்துள்ளது. பொதுவாக தங்கத்தின் நுகர்வு அதிகரிக்கும்போது அதன் விலை உயரும். தற்போது தங்கத்தின் நுகர்வு குறைந்துள்ள நிலையில், தங்கம் விலை மேலும் குறையும் என கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி, எந்த ஒரு பொருளாக இருந்தாலும் கடும் விலை உயர்வுக்கு பின் விலை சரிவை சந்திக்கும். தற்போது தங்கத்திற்கு அதே சூழல் தான் ஏற்பட்டுள்ளது. எனவே தங்கம் விலை ரூ.80,000 வரை குறைய வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
                         
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                    