Gold Price : மீண்டும் சரிந்த தங்கம்.. ஒரே நாளில் ரூ.1,800 குறைந்தது.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி!
Gold Price Reduced 1800 Per Sovereign | தங்கம் விலை கடந்த சில நாட்களாக கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில், இன்று (அக்டோபர் 30, 2025) மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, அக்டோபர் 30 : தங்கம் விலை (Gold Price) கடும் உயர்வுக்கு பிறகு கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. நேற்று (அக்டோபர் 29, 2025) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்று (அக்டோபர் 30, 2025) மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. இன்றைய நிலவரப்படி தங்கம் ஒரு கிராம் ரூ.11,100-க்கும், ஒரு சவரன் ரூ.88,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மீண்டும் சரிவை சந்தித்த தங்கம் விலை – நகை பிரியர்கள் மகிழ்ச்சி
தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வரலாறு காணாத உச்சத்தில் இருந்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் ரூ.97,000 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போ தலைகீழாக உள்ளது. அதாவது தற்போதைய நிலவரப்படி தங்கம் ரூ.90,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக அக்டோபர் 22, 2025 அன்று தங்கம் சர்வேத அளவில் கடும் சரிவை சந்தித்தது. அன்றைய தினம் மட்டும் தங்கம் 6.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. அதனை தொடர்ந்து தங்கம் தொடர் சரிவை சந்தித்து வருகிறது.
இதையும் படிங்க : பெண்களுக்கு அதிக லாபத்தை தரும் அசத்தல் திட்டங்கள்.. லிஸ்ட் இதோ!
ஒரே வாரத்தில் ரூ.3,200 குறைந்த தங்கம்
- 23 அக்டோபர், 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,500-க்கும், ஒரு சவரன் ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- 24 அக்டோபர், 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,400-க்கும், ஒரு சவரன் ரூ.91,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- 25 அக்டோபர், 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,500-க்கும், ஒரு சவரன் ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- 26 அக்டோபர், 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,500-க்கும், ஒரு சவரன் ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- 27 அக்டோபர், 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,450-க்கும், ஒரு சவரன் ரூ.91,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- 28 அக்டோபர், 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,075-க்கும், ஒரு சவரன் ரூ.88,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- 29 அக்டோபர், 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,325-க்கும், ஒரு சவரன் ரூ.90,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- 30 அக்டோபர், 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,100-க்கும், ஒரு சவரன் ரூ.88,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க : Silver ETF : மீண்டும் முதலீட்டிற்கு திறக்கப்பட்ட வெள்ளி ETFகள்.. அதுவும் சலுகையுடன்!
இன்றைய தங்கம் நிலவரம்
நேற்று (அக்டோபர் 29, 2025) 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ11.325-க்கும், ஒரு சவரன் ரூ.90,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று (அட்கோபர் 30, 2025) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.225 குறைந்து ஒரு கிராம் ரூ.11,100-க்கும், சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ஒரு சவரன் ரூ.88,800-க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.