Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

BNPL : பிஎன்பிஎல் அம்சத்தில் மறைந்திருக்கும் சிக்கல்.. என்ன என்ன தெரியுமா?

Buy Now Pay Later Risks | பெரும்பாலான பொதுமக்கள் பொருட்களை முதலில் வாங்கிவிட்டு அதற்கான பணத்தை பிறகு செலுத்தும் அம்சத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால், அதில் மறைந்திருக்கும் சிக்கல்கள் குறித்து அவர்களுக்கு தெரிவதில்லை. இந்த நிலையில், அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

BNPL : பிஎன்பிஎல் அம்சத்தில் மறைந்திருக்கும் சிக்கல்.. என்ன என்ன தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Nov 2025 15:08 PM IST

பெரும்பாலான மனிதர்கள் மொத்தமாக பணத்தை செலுத்தி பொருட்களை வாங்க விரும்புவதில்லை. மாறாக அவர்கள் மாத தவணை (EMI – Every Month Installment) முறையிலோ அல்லது பொருளை வாங்கிக்கொண்டு பணத்தை பிறகு திருப்பி செலுத்தும் அம்சத்தை தேர்வு செய்கின்றனர். குறிப்பாக பலரும் பொருளை வாங்கிக்கொண்டு பணத்தை பிறகு செலுத்தும் அச்மத்தை (BNPL – Buy Now Pay Later) தான் தேர்வு செய்கின்றனர். அது அவர்களுக்கு பொருளை வாங்குவதற்கான சுலபமான வழியாக தோன்றுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல. பொருளை வாங்கிவிட்டு அதற்கு பிறகு பணத்தை செலுத்தும் அம்சத்தில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலான்.

பிஎஃன்பிஎல் என்றால் என்ன?

பிஎஃன்பிஎல் என்பது மாத தவணை போன்ற ஒரு முறை ஆகும். மாத தவணை முறையில் நீங்கள் முதலில் முன் பணம் செலுத்திவிட்டு பிறகு மாத தவணை முறையில் பணம் செலுத்தலாம். ஆனால், பிஎன்பிஎல் அம்சத்தில் இது முற்றிலும் மாறுபட்டது. அதாவது நீங்களை பொருளை முன்பு வாங்கிவிட்டு அதற்கான பணத்தை பிறகு செலுத்திக்கொள்ளலாம். கிரெடிட் கார்டு (Credit Card) உள்ளிட்டவை இந்த பிஎன் பிஎல்அம்சத்தின் கீழ் வரும். இந்த அம்சம் பயனுள்ளதாக உள்ளது என நினைத்து பலரும் இதனை பயன்படுத்துகின்றனர். ஆனால், அதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து பலருக்கு தெரிவதில்லை. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : 8.2% வரை வட்டி வழங்கும் அசத்தல் முதலீட்டு திட்டங்கள்.. என்ன என்ன?

பின்பிஎல் அம்சத்தில் இருக்கும் சிக்கல்கள்

பிஎஃன்பிஎல் அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், அதில் பல கடன் சிக்கல்கள் மறைந்துள்ளது. குறிப்பாக பிஎன்பிஎல் அம்சத்தில் 0 சதவீதம் வட்டி என்று வாக்குறுதி வழங்கப்படும். ஆனால், அது உண்மை இல்லை. பிஎன்பிஎல் அம்சத்தை பொருத்தவரை உரிய நேரத்தில் பணத்தை திருப்பி செலுத்தினால் மட்டுமே அது பொருந்தும். ஒருவேளை நீங்கள் பணத்தை உரிய நேரத்தில் செலுத்தவில்லை என்றால் உங்களுக்கு பல மடங்கு கட்டணம் விதிக்கப்படும்.

இதையும் படிங்க : டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது அல்ல.. எச்சரிக்கும் செபி.. காரணம் என்ன?

பிஎன்பிஎல் அம்சத்தில் இருக்கும் மேலும் சில சிக்கல்கள்

பிஎன்பிஎல் அம்சத்தில் பொருட்களை முன்பு வாங்கி அதற்கு பிறகு பணத்தை செலுத்தும் வசதி உள்ள நிலையில், அது தேவையற்ற மற்றும் முக்கியத்துவம் இல்லாத பொருட்களை வாங்க வழிவகை செய்கிறது. இவ்வாறு பொதுமக்கள் பிஎன்பிஎல் அம்சத்தின் மூலம் பொருட்களை வாங்கும் நிலையில், அது அவர்களுக்கு கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்த வழிவகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.