பிள்ளைகளின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய பெற்றோர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 3 முக்கிய திட்டங்கள்!
Best Investment Schemes For Children | அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்றும் சில திட்டங்கள் மற்றும் அதன் சிறப்பு பலன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
அனைத்து பெற்றோருக்கும் தங்களது பிள்ளைகளில் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்ற ஆசை மற்றும் கனவு இருக்கும். அதற்காக அவர்கள் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி வழங்குவது, பொருளாதாரத்தை உருவாக்குவது என பலவற்றை செய்வர். அந்த வகையில், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளில் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்றக்கூடிய சில முதலீட்டு திட்டங்கள் (Investment Schemes) உள்ளன. அவை என்ன என்ன திட்டம், அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிள்ளைகளின் சிறந்த எதிர்காலத்துக்கான திட்டம்
ஒரு குழந்தைக்கு கல்வி மற்றும் உடல் ஆரோக்கியம் எந்த அளவுக்கு முக்கியமானதோ அதே அளவுக்கு பொருளாதாரமும் மிக முக்கியமான ஒன்றகா கருதப்பட்டுகிறது. எனவே, பிள்ளைகளில் எதிர்காலத்தை பாதுகாக்கக்கூடிய சில திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா
பெண் குழந்தைகளுக்காக அரசு செயல்படுத்தும் ஒரு பிரத்யேக திட்டம் தான் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY – Sukanya Samriddhi Yojana). இந்த திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த திட்டத்தில் பெண் குழந்தைகள், குழந்தைகளாக இருக்கும்போது அவர்களது பெயரில் வெறும் ரூ.250 முதலீடு செய்யலாம். அந்த குழந்தை 21 ஆண்டுகள் நிறைவடையும்போது பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.




இதையும் படிங்க : தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டம்.. ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
குழந்தைகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டம்
ஆபத்து குறைவான முதலீட்டு திட்டம் என்றால் அது நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit) திட்டம் தான். பெரும்பாலான இந்திய குடும்பங்களுக்கு இது மிகவும் நம்பகத்தன்மை உள்ள திட்டமாக உள்ளது. சில வங்கிகள் மற்ற நிலையான வைப்பு நிதி திட்டங்களை விடவும், குழந்தைகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு அதிக வட்டி வழங்குகின்றன.
இதையும் படிங்க : Digital Gold, E-gold வாங்கலாமா? பாதுகாப்பானதா? SEBI விடுத்த எச்சரிக்கை!!
என்பிஎஸ் வத்சல்யா யோஜனா
என்பிஎஸ் வத்சல்யா (NPS Vatsalya) தங்களது பிள்ளைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க நினைக்கும் பெற்றோர்களுக்கான சிறந்த திட்டங்களில் ஒன்றாக உள்ளது. இந்த திட்டத்திற்கு 9.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இதில் ரூ.1,000 முதலே முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. குழந்தைகளின் எதிர்காலம் பொருளாதார பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என நினைக்கும் பெற்றோருக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.