Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Digital Gold, E-gold வாங்கலாமா? பாதுகாப்பானதா? SEBI விடுத்த எச்சரிக்கை!!

Digital Gold, E-Gold என்ற பெயரில் தங்க நகைக்கடைகளும் சமீபமாக அதிகளவில் பல்வேறு விளம்பரங்களை செய்து வருகின்றன. திரும்பிய பக்கமெல்லாம், நீங்கள் இந்த விளம்பரங்களை பார்த்திருக்கலாம். அதில், தங்கத்தை சேமித்தால், சேதாரம், செய்கூலி இல்லை என்றெல்லாம் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால், பாதுகாப்பு உள்ளதா? என்றால் பதில் இல்லை.

Digital Gold, E-gold வாங்கலாமா? பாதுகாப்பானதா? SEBI விடுத்த எச்சரிக்கை!!
தங்கம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 09 Nov 2025 09:36 AM IST

Digital Gold, E-Gold போன்ற ஆன்லைன் தங்கத்தை வாங்குவோருக்கு எந்த சட்டப் பாதுகாப்பும் இல்லை என்பதால் எச்சரிக்கையாக இருக்க SEBI அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. பத்திரங்கள் அல்லது சரக்கு வர்த்தகப் பொருட்களின் கீழ், டிஜிட்டல் தங்கம் அங்கீகரிக்கப்படவில்லை, அதோடு அவை அமைப்பின் கட்டுபாட்டுக்குள் வராது என்றும் தெரிவித்துள்ளது. சமீப காலமாக தங்கம் விலை வரலாறு காணாத அளவு நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருகிறது. பொதுவாகவே தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் என்றாலும் கடந்த 6 மாத காலத்தில் மட்டும், யாரும் எதிர்பாராத உச்ச விலைக்கு சென்றுவிட்டது. தற்போதைய நிலவரத்தின் படி ஒரு சவரன் தங்கம் ரூ.90,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய கடும் விலை உயர்வினால் நடுத்தர மக்கள் அதனை நினைத்துக்கூட பார்க்க முடியாது ஒன்றாக தங்கம் மாறியுள்ளது.

இதையும் படிங்க: Gold Price : மீண்டும் எழ தொடங்கிய தங்கம்.. இனி வரும் காலங்களில் மேலும் விலை உயருமா?

இந்த கடும் விலை உயர்வு, ஒரு பக்கம் யாரும் வாங்க முடியாத அளவுக்கு சென்றாலும், மற்றொரு பக்கம் எப்படியாவது வங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தை அனைவருக்கும் அளித்துள்ளது. அதாவது, தங்கத்தை நகைகளாக வாங்காவிட்டாலும், அதனை பெரும்பாலானோர் முதலீடு, சேமிப்பாக பார்க்க தொடங்கியுள்ளனர். காரணம் குறுகிய காலத்தில் விலை இரட்டிப்பு ஆவதால், வங்கி சேமிப்பு உள்ளிட்ட அனைத்தையும் விட தங்கம் அதிக லாபம் தரும் என்று நினைக்கின்றனர். தங்களது சேமிப்பு இரட்டிப்பாக வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதற்கு தங்கம் ஏற்ற முதலீடு என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. அதேசமயம், அதனை எவ்வாறு சேமிக்க உள்ளோம் என்பதிலும் மிகுந்த கவனம் தேவை.

அப்படி தங்கத்தை சேமிக்க பல்வேறு வகைகளை கையாள்கிறோம். அதாவது, நகைக் கடைகளில் சீட்டு கட்டி தங்கம் வாங்குவது சிறப்பானதாக ஒரு சிலர் கருதுகின்றனர். இதற்காக பல்வேறு வகைகளில் நகைச்சீட்டு முறைகளையும் நகைக் கடைகள் வைத்துள்ளன. அதில், மாதம் மாதம் பணம் செலுத்தி சேர்க்கலாம். இது நீங்கள் நகைச் சீட்டு சேரும் நகைக்கடையை வைத்தே அதன் நம்பிக்கை தன்மை இருக்கும், இதில் பெரும்பாலும் ரிஸ்க் குறைவே. அதேசமயம், Digital Gold, E-Gold என்ற பெயரில் தங்க நகைக்கடைகளும் சமீபமாக அதிகளவில் பல்வேறு விளம்பரங்களை செய்து வருகின்றன.

இதனை தான் தற்போது செபி அமைப்பு எச்சரித்துள்ளது. Digital Gold, E-Goldக்கு எந்த சட்டப் பாதுகாப்பும் இதுவரை வகுக்கப்படவில்லை. பத்திரங்கள் அல்லது சரக்கு (Commodity) வர்த்தகப் பொருட்களின் கீழ், டிஜிட்டல் தங்கம் அங்கீகரிக்கப்படவில்லை எனவும் ஆதலால் அவை செபி அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வராது என்றும் தெளிவுப்படுத்தியுள்ளது. அதேசமயம், பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் தங்க ஒப்பந்தங்கள் (commodity derivatives), Gold ETFs, Electronic Gold Receipts (EGRs) வழியாக தங்கத்தில் சட்டபூர்வமாக முதலீடு செய்யலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : அரசுக்கு வட்டிக்கு பணத்தை கொடுத்து லாபம் பெறலாம்.. எப்பட.. முழு விவரம் இதோ!

இவ்வாறு செபி அமைப்பு எச்சரிக்கை விடுத்த போதிலும் பல பிரபலமான பிராண்டுகள் மற்றும் தளங்கள் டிஜிட்டல் தங்கத்தை தொடர்ந்து வழங்கி வருகின்றன. அதனால், தங்கத்தை சேமிப்பது சிறந்த யோசனை என்றாலும், அதன் பாதுகாப்பு அம்சங்களை அறிந்து செயல்படுவது முக்கியமானதாகும்.