Gold Price : மீண்டும் எழ தொடங்கிய தங்கம்.. இனி வரும் காலங்களில் மேலும் விலை உயருமா?
Gold Price Will Continue to Hike | தங்க விலை கடுமையான உச்சத்தில் இருந்த நிலையில், சற்று சரிவை சந்தித்தது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தங்கம் சிறிய அளவிலான விலை உயர்வை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2025, அக்டோபர் மாத தொடக்கத்தில் தங்கம் விலை (Gold Price) கடும் உச்சத்தில் இருந்தது. ஆனால், அக்டோபர் 22, 2025 முதல் தங்கம் விலை படிப்படியாக சரிந்து வருகிறது. இதன் காரணமாக தங்கம் விலை குறையும் என்ற எதிர்ப்பார்ப்பு எழ தொடங்கியுள்ளது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் மீண்டும் வழக்கம் போல உயர்வை அடைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வரும் காலங்களில் தங்கம் விலை மீண்டும் அதிகரிக்குமா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழ தொடங்கியுள்ளது. இந்த நிலையில், இனி வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் உயருமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடும் உயர்வுக்கு பிறகு சரிவை சந்தித்த தங்கம்
அக்டோபர் மாத தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை நெருங்கி விற்பனை செய்யப்பட்டது. அதாவது ஒரு சவரன் ரூ.97,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் அக்டோபர் 22, 2025 அன்று தங்கம் சர்வதேச சந்தையில் கடும் சரிவை சந்தித்தது. அதாவது அன்றைய தினம் மட்டும் தங்கம் 6.3 சதவீதம் வரை சரிவை சந்தித்தது. இதனை தொடர்ந்து தங்கம் படிப்படியாக விலை குறைய தொடங்கியது. அதாவது ரூ.97,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம் ரூ.90,000 என்ற நிலையில் விற்பனையாகி வந்தது.
இதையும் படிங்க : வங்கி முதல் ஆதார் வரை.. நவம்பர் மாதம் இதெல்லாம் மாறுது.. தெரிஞ்சுக்கோங்க!




மீண்டும் உயரும் தங்கம் விலை
- அக்டோபர் 26, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,500-க்கும், ஒரு சவரன் ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- அக்டோபர் 27, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,450-க்கும், ஒரு சவரன் ரூ.91,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- அக்டோபர் 28, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,075-க்கும், ஒரு சவரன் ரூ.88,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- அக்டோபர் 29, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,325-க்கும், ஒரு சவரன் ரூ.90,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- அக்டோபர் 30, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,300-க்கும், ஒரு சவரன் ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- அக்டோபர் 31, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,300-க்கும், ஒரு சவரன் ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- நவம்பர் 01, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,310-க்கும், ஒரு சவரன் ரூ.90,480-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- நவம்பர் 02, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,310-க்கும், ஒரு சவரன் ரூ.90,480-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க : அரசுக்கு வட்டிக்கு பணத்தை கொடுத்து லாபம் பெறலாம்.. எப்பட.. முழு விவரம் இதோ!
தங்கம் அதிரடியாக விலை சரிந்த நிலையில், கடந்த சில நாட்களாக சிறிதளவு உயர்வை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் தான் பொருளாதார வல்லுநர்கள் அது குறித்து விளக்கம் அளித்துள்ளனர். அதாவது, அமெரிக்கா மற்றும் சீனா உடனான வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கான உறுதியான முடிவு எட்டப்படும் வரை தங்கம் விலை சற்று தணிந்து தான் இருக்கும் என கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.