AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கைதில் இருந்து தப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்.. ஆனால் 10 நாட்களுக்கு.. தூத்துக்குடி கோர்ட் உத்தரவு!

DMK Ex Minister Anitha Radhakrishnan: முதல்வர் விஜயை விமர்சித்ததாக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவுக்கு ஜாமீன் வழங்கி தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, ஆத்தூர் காவல் நிலையத்தில் 10 நாள்கள் கையெழுத்துபோடுமாறு உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

கைதில் இருந்து தப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்.. ஆனால் 10 நாட்களுக்கு.. தூத்துக்குடி கோர்ட் உத்தரவு!
கைதில் இருந்து தப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 04 Jul 2026 06:28 AM IST

தமிழக முதல்வர் ஜோசப் விஜயை திமுகவின் முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏவும் ஆன அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, திருச்செந்தூர் தொகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணனை எம்எல்ஏவை ஆத்தூர் போலீசார் நேற்று வெள்ளிக்கிழமை காலை அதிரடியாக கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரை தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தியது. பின்னர், அவரை நேற்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அனிதாவுக்கு ரூ.10 அபராதத்துடன் ஜாமீன்

அப்போது, அவரிடம் நீதிபதி சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, அவரை சொந்த ஜாமீனில் நீதிபதி விடுவித்தார். அத்துடன், ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தும் படி உத்தரவிட்டார். மேலும், 10 நாட்களுக்கு ஆத்தூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டார். இதை தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தன்னை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யுமாறு போலீசார் நிர்பந்தம் செய்வதாகவும், தமிழக வெற்றி கழகத்தில் இணைய கோரி அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன், தான் ராஜினாமா செய்ய மாட்டேன். திமுகவிலிருந்தும் விலக மாட்டேன்.

மேலும் படிக்க: சிறுவயது மகனுக்கு மது ஊற்றி கொடுத்த தந்தை… வீடியோ வைரலானதால் கம்பி எண்ணிய தகப்பன்.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!

தவெக ஆட்சி 6 மாதங்கள் தான் நீடிக்கும்

தவெக ஆட்சி 6 மாதங்கள்தான் நீடிக்கும். அந்த ஆட்சியை தொடர்ந்து நீடிக்க விடமாட்டோம். விஜய் மட்டுமின்றி யாரையும் எதிர்ப்போம். காவல்துறை அராஜகம் செய்து வருகிறது. காவல்துறை என்னை மிரட்டி வருகிறது என்று உணர்ச்சி பொங்க பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம். எல். ஏ. பங்கேற்று பேசினார்.

அவதூறு வழக்கின் பின்னணி

அப்போது, தமிழக முதல்வர் விஜய் சினிமா நடிகைகளோடு ஜாலியாக இருந்தார். அவரை கொண்டு வந்து சட்டசபையில் உட்கார வைத்தவுடன் என்ன பேச வேண்டும் என தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் என்று அவதூறாக பேசியதாக தெரிகிறது. இது தொடர்பாக, அழைக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ராதாகிருஷ்ணன் மீது பி என் எஸ் 352 மற்றும் 353/25 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 3 லட்சம் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி.. பரிசீலனையில் 3 லட்சம் கார்டுகள்.. எப்போது வழங்கப்படும்!

Follow Us