EPFO இணையதளத்தில் இனி இந்த சேவைகள் கிடைக்காது.. வேறு என்ன செய்வது?
Services Dismissed In EPFO Portal | உழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் தனது இணையதளத்தை மேம்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த சில சேவைகளை நீக்கம் செய்துள்ள இபிஎஃப்ஓ, மேலும் புதிய சேவைகளை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் (EPFO – Employee Provident Fund Organization) இணையதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஊழியர்கள் விரைவாகவும், எளிதாகவும் பணத்தை எடுத்துக்கொள்ள வழிவகை செய்யும் நோக்கில் இபிஎஃப்ஓ 3.0 (EPFO 3.0) அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதற்காக தான் இபிஎஃப்ஓ தனது இணையதளத்தை மேம்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட இந்த இணையதளத்தில் புதியதாக சில சேவைகளி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே பயன்பட்டில் இருந்த சில சேவைகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இபிஎஃப்ஓ இணையதளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள்
இபிஎஃப்ஓ தனது ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்டலை மேம்படுத்தியுள்ளது. இதில் சில வசதிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், சில வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இனி ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் மூலம் யுஏஎன் (UAN – Universal Account Number) ஆக்டிவேஷன் (UAN Activation) மற்றும் யுஏஎன் உருவாக்கம் (UAN Creation) ஆகியவற்றை மேற்கொள்ள முடியாது என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அமலுக்கு வந்தது புதிய 2026 EPFO.. முக்கிய மாற்றங்கள் என்ன என்ன.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!




இனி இந்த சேவைகள் இபிஎஃப்ஓ இணையதளத்தில் கிடைக்காது
இதுவரை இபிஎஃப்ஓ இணையதளத்தில் வழங்கப்பட்டு வந்த யுஏஎன் ஆக்டிவேஷன் மற்றும் யுஏஎன் உருவாக்கம் ஆகிய சேவைகள் இனி இபிஎஃப்ஓ இணையதளத்தில் கிடைக்காது. இந்த சேவைகள் இபிஎஃப்ஓவின் மொபைல் செயலியான உமாங்க் செயலிக்கு (UMANG App) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஊழியர்கள் அந்த செயலியை பயன்படுத்தி தங்களது யுஏஎன் தொடர்பான சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : இனி கூடுதலாக பணம் செலுத்தலாம்… வந்தாச்சு புதிய பிஎஃப் திட்டம் – ஊழியர்களுக்கு என்ன மாற்றம்?
அறிமுகம் செய்யப்பட்ட புதிய சேவைகள்
இபிஎஃப்ஓ இணையதளத்தில் யுஏஎன் சேவைகள் நீக்கம் செய்யப்பட்டு இருந்தாலும் யுஏஎன் எண்ணை கண்டறியும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளது. அதாவது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் அடையாள ஆவணங்களை பயன்படுத்தி ஊழியர்கள் தங்களது யுஏஎன் எண்ணை மிக எளிதாக கண்டறிய முடியும்.
இதையும் படிங்க : வருமான வரி தாக்கல் செய்ய போறீங்களா? புதியதாக கார் வாங்கி இருந்தால் உங்களுக்கு ரூ.10,000.. இத தெரிஞ்சுக்கோங்க!
ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்களின் இறப்பு தொடர்பான கோரிக்கைகளை பழைய முறைப்படி இபிஎஃப்ஓ இணையதளம் வழியாக தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.