வீடி புகுந்து தாக்கிய வழக்கு.. அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகாததால் நீதிபதி ஆவேசம்.. புதுச்சேரி நீதிமன்றம் ஸ்ட்ரிட் உத்தரவு!
Minister Maria Wilson Case: புதுச்சேரியில் சகோதரரை வீடு புகுந்து தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்கு தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட நிலையில், அவர் ஆஜராகவில்லை.
தமிழக அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக இருந்து வருபவர் மரிய வில்சன். இவரது சகோதரர் மரிய கிளோத் என்பவர் புதுச்சேரி மாநிலம், லாஸ்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 2022- ஆம் ஆண்டு தொழில் போட்டி காரணமாக மரிய கிளோத்தின் வீடு புகுந்து அமைச்சர் மரிய வில்சன் உள்ளிட்டோர் கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டனர். அத்துடன் வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து சூறையாடினர். இது தொடர்பாக மரிய கிளோத் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னதாக இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது.
நீதிமன்றத்தில் ஆஜராகாத அமைச்சர் மரிய வில்சன்
அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி சேரலாதன் தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் இன்று சனிக்கிழமை ( ஜூலை 4- ஆம் தேதி) கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். ஆனால், இன்றைய தினம் தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஆனால், அவரது தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர். அதில், தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பான வேலைகளில் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் படிக்க: கேஷ் மட்டுமல்ல.. ஜிபே லஞ்சமும் சிக்கியது.. 41 அரசு அலுவலகத்தில் ரூ57.98 லட்சம் கணக்கில் வராத பணம்.. லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!




ஜூலை 10- இல் கட்டாயம் ஆஜராக உத்தரவு
இதன் காரணமாக அவரால் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்று தெரிவித்திருந்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி சேரலாதன் வரும் ஜூலை 10- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் மற்றும் அவரது சகோதரர் மரிய கிளோத் ஆகியோர் இடையே சொத்து பிரச்சனை மற்றும் தொழில் போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவர் இடையே தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.
புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி ஆணை
இந்த நிலையில், கடந்த 2022- ஆம் ஆண்டு மரிய வில்சன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவரது சகோதரர் வீட்டின் உள்ளே அத்துமீறி நுழைந்து மரிய கிளோத் மற்றும் அவரது மனைவி ஆகியோரை தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பான வழக்கில் ஆஜராக கூறி புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி ஆணை பிறப்பித்துள்ளது. இதனிடையே, மரிய வில்சன் வீடு புகுந்து தாக்கியது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மறுவாழ்வு மையமா? மரண மையமா? நெல்லையில் சிறுவன் ரத்த காயங்களுடன் மர்ம மரணம்.. போலீஸ் விசாரணை!