AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கேஷ் மட்டுமல்ல.. ஜிபே லஞ்சமும் சிக்கியது.. 41 அரசு அலுவலகத்தில் ரூ57.98 லட்சம் கணக்கில் வராத பணம்.. லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

Anti Corruption Raids ரூ.57 lakh seized : தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்கள் என சுமார் 41 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.57.98 லட்சம் கண்டறியப்பட்டது.

கேஷ் மட்டுமல்ல.. ஜிபே லஞ்சமும் சிக்கியது.. 41 அரசு அலுவலகத்தில் ரூ57.98 லட்சம் கணக்கில் வராத பணம்.. லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!
லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.57.98 லட்சம் சிக்கியது
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 04 Jul 2026 07:06 AM IST

தமிழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி என சுமார் 41 அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், 41 அரசு அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.31 லட்சத்து 27 ஆயிரத்து 110 ரொக்கம் மற்றும் ஜி பே பரிவர்த்தனைகளில் ரூ.26 லட்சத்து 70 ஆயிரத்து 990 ரொக்கம் என மொத்தம் ரூ.57 லட்சத்து 98 ஆயிரத்து 100 கண்டறியப்பட்டது. இந்த அதிரடி சோதனை தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இயக்குனர் அலுவலகம் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்: சென்னை நகரம் 1 கோடம்பாக்கம் பகுதி 10- அலுவலகத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம், சென்னை நகரம் 2 பெருநகர சென்னை மாநகராட்சி திருவேற்காடு பகுதி 6 அலுவலகத்தில் இருந்து ரூ.38 ஆயிரத்து 590, சென்னை நகரம் 3- தேனாம்பேட்டை பகுதி அலுவலகம், நுங்கம்பாக்கம் பகுதி 9- அலுவலகத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 800 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பகுதி அலுவலகங்களில்…

இதே போல,  சென்னை நகரம் 4 அண்ணா நகர் பகுதி அலுவலகம் பகுதி 8- இல் இருந்து ரூ.23 ஆயிரத்து 050, நகர சிறப்பு பகுதி 1- ராயபுரம் பகுதி அலுவலகம் 5- இல் இருந்து ரூ.64 ஆயிரத்து 500, நகர சிறப்பு பகுதி 3- புழுதிவாக்கம் பகுதி 14- அலுவலகத்தில் இருந்து ரூ.23 ஆயிரத்து 500, காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் ரூ.37 ஆயிரத்து 710, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் ரூ.67 ஆயிரம், வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு நகராட்சி அலுவலகத்தில் ரூ.8 ஆயிரத்து 610 ரொக்கமாகவும், ரூ.20 ஆயிரம் ஜி பே வழியாகவும், கடலூர் மாவட்டம், மேல்பட்டம்பாக்கம் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ரூ.12,200, ஜி பே-ரூ1,26,190, விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் நகராட்சி அலுவலகத்தில் ரூ.1,02,370 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க: சிவகங்கையில் பரபரப்பு.. காவல் நிலையத்திற்குள் புகுந்து எஸ்.ஐ. மீது தாக்குதல்.. திமுக நிர்வாகி அதிரடி கைது!

திருவண்ணாமலை- திருப்பத்தூர் அலுவலகங்களில்

திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.55,000, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.88,000, ஜிபே ரூ.1,16,000, திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் ஜிபே ரூ.5,79,300, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா நகராட்சி அலுவலகத்தில் ரூ.13,200, கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் ரூ.1,67,000, கோயம்புத்தூர் மத்திய மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.12,200, திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ரூ.19,300, தென்காசி நகராட்சி அலுவலகத்தில் ரூ.43,160, ஜிபே ரூ.52,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி- தென்காசி அலுவலகத்தில்…

திருநெல்வேலி மாநகராட்சி இன்ஜினியர் பிரிவில் ரூ.96,000, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.7,49,900, கன்னியாகுமரி நகராட்சி அலுவலகத்தில் ரூ.52,500, திருச்சி நகரம் மாநகராட்சி பகுதி 5 அலுவலகத்தில் ரூ.20,500 உள்ளிட்ட 41 அலுவலகங்களில் மொத்தம் ரூ.57,98,100 கணக்கில் வராதது கண்டறியப்பட்டது.

மேலும் படிக்க: எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யக்கோரி போலீசார் நிர்பந்தம்.. தவெகவில் இணையக்கோரி அழுத்தம்.. அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

Follow Us