AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோவை முழுவதும் திடீர் பரபரப்பு.. அதிகாலையிலேயே போலீசார் நடத்திய ரகசிய ஆபரேஷன்.. நடந்தது என்ன?

இன்று விடியற்காலம் முதல் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையின் முதற்கட்டமாக, பெருமளவிலான கஞ்சா மூட்டைகள், நவீன ரசாயன போதைப்பொருளான மெத்தம்பேட்டமைன் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலைப் பொருட்களைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் பின்னணியில் இருந்த சில முக்கிய நபர்களையும் போலீசார் வளைத்துப் பிடித்துள்ளனர்.

கோவை முழுவதும் திடீர் பரபரப்பு.. அதிகாலையிலேயே போலீசார் நடத்திய ரகசிய ஆபரேஷன்.. நடந்தது என்ன?
போலீசார் ஆலோசனை
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 04 Jul 2026 08:13 AM IST

கோவை, ஜூலை 04: கோவை மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், மாவட்ட காவல் துறையினர் இன்று விடியற்காலையிலேயே மிகப்பெரிய அளவிலான அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி மேற்பார்வையில், மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து முக்கிய காவல் நிலையப் பகுதிகளிலும் இந்த சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.  அதிகாலையிலேயே தனிப்படைகளாகப் பிரிந்த நூற்றுக்கணக்கான போலீசார் மாவட்டத்தின் பல்வேறு முனைகளிலும் ஒரே நேரத்தில் சோதனையைத் தொடங்கினர்.

இதையும் படிக்க: கரூர் சம்பவம்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சை பேச்சு.. திமுக எடுத்த திடீர் முடிவு!!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்:

வெளி மாநிலங்களில் இருந்து பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலமாக கோவைக்கு போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாகவும், அவை நகரின் சில குறிப்பிட்ட பகுதிகளில் ரகசியமாகத் தரம் பிரிக்கப்பட்டு, பின்னர் சிறு வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுவதாகவும் மாவட்ட தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

கல்லூரி விடுதிகளில் நடந்த சோதனை:

இந்தத் தகவலின் அடிப்படையில், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ள குடியிருப்புகள், கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள தனியார் விடுதிகள் மற்றும் சந்தேகத்திற்குரிய தங்குமிடங்களை இலக்காகக் கொண்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர். குறிப்பாக, தொண்டாமுத்தூர், மாதம்பட்டி, கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து முக்கிய மற்றும் எல்லையோரப் பகுதிகளில் போலீசார் தீவிரமாகச் சோதனையிட்டனர்.

கிலோ கணக்கில் போதைப்பொருட்கள் பறிமுதல்:

இன்று விடியற்காலம் முதல் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையின் முதற்கட்டமாக, பெருமளவிலான கஞ்சா மூட்டைகள், நவீன ரசாயன போதைப்பொருளான மெத்தம்பேட்டமைன் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலைப் பொருட்களைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் பின்னணியில் இருந்த சில முக்கிய நபர்களையும் போலீசார் வளைத்துப் பிடித்துள்ளனர்.

இதையும் படிக்க: எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யக்கோரி போலீசார் நிர்பந்தம்.. தவெகவில் இணையக்கோரி அழுத்தம்.. அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

இச்சோதனையின் முழுமையான நிறைவில், கைது செய்யப்பட்டுள்ள நபர்களின் விவரங்கள் மற்றும் மொத்தம் எவ்வளவு மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விரிவான அதிகாரப்பூர்வ அறிக்கையைக் காவல்துறை இன்று மாலை வெளியிட உள்ளது. கோவையில் ஒட்டுமொத்த காவல் துறையும் திரண்டு விடியற்காலையில் நடத்திய இந்த அதிரடி வேட்டை, போதைப்பொருள் கடத்தல் கும்பலிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us