இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் யாருனு தெரியுதா? பலமுறை மணிரத்னம் மற்றும் சங்கர் படத்தில் இணைந்து நடித்த நடிகர்தான் இவர்!
Tamil Celebrity Childhood Photo: தமிழில் அவ்வப்போது பிரபலங்களின் சிறுவயது அடையாளம் தெரியாத புகைப்படங்கள் வைரலாகிவருவது வழக்கம். அந்த வகையில் இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் யாருனு தெரியுமா?. இவரின் மகனும் தற்போது சினிமாவில் நடிகராக நடித்துவருகிறார். இந்த சிறுவன் யார் என பார்க்கலாம்.
தென்னிந்திய மொழி சினிமாவில் தொடர்ந்து பல்வேறு நடிகர்கள் சினிமாவில் நடித்துவருகிறார்கள். அதிலும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை (Tamil Cinema) ஒப்பிடும்போது இரண்டுமே மக்களுக்கு மிகவும் நெருக்கமான ஒன்றும். அந்த விதத்தில் நடிகர்களின் அடையாளம் தெரியாத குழந்தை பருவம் மற்றும் சிறுவயது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரவிவருகிறது. இந்நிலையில் மேலே இருக்கும் புகைப்படத்தில் உள்ள கருப்பு வெள்ளை போட்டோவில் இருக்கும் சிறுவன் யார் என தெரிகிறதா?. இவர் ஆரம்பத்தில் தெலுங்கு , தமிழ் மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் படங்கள் நடித்துவந்தார். தற்போது தமிழில் மட்டுகே கதாநாயகனாக நடித்துவருகிறார். இவர் எந்தவித சினிமா பின்னணி இல்லாமல், சினிமாவில் நுழைந்தவர் இவர். அதிலும் இவர் தமிழ் சினிமாவின் மிகவும் போற்றப்படும் இயக்குநர்களான மணிரத்னம் (Mani Ratnam) மற்றும் எஸ் சங்கரின் (S. Shankar) இயக்கத்தில் வெளியாகியிருக்கும் பல படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
அந்த வகையில் இவரை அடுத்ததாக தற்போது இவரின் மகனும் இளம் கதாநாயகனாக சினிமாவில் நுழைந்துள்ளார். அவர்கள் இருவருக்கும் மகன் மற்றும் அப்பா என்ற பந்தத்தை அடுத்ததாக நண்பர்கள் போல இருப்பார்கள். இப்போது இந்த புகைப்படத்தில் உள்ள நடிகர் யார் என தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஆமாம் இந்த போட்டோவில் உள்ள சிறுவன் நடிகர் சியான் விக்ரம் தான் (Chiyaan Vikram).




இதையும் படிங்க: சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் நடித்தது இப்படிதான் – இயக்குநர் வாசு ஓபன் டாக்!
நடிகர் சியான் விக்ரமின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகர் சியான் விக்ரம் சினிமாவில் கடந்துவந்த பாதை:
நடிகர் சியான் விக்ரம் தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை கிட்டத்தட்ட 60க்கும் மேற்படட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 1990ம் ஆண்டில் வெளியான “என் காதல் கண்மணி” என்ற படத்தின் மூலம் நடிகராக சினிமாவில் நுழைந்தார். இவரின் படங்களுக்கு ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் வரவேற்புகள் கிடைக்கவில்லை. இவருக்கு தொடர்ந்து தோல்வி திரைப்படங்களாக அமைந்தது. மேலும் இவர் தனது அறுவை சிகிச்சையின் காரணமாகவும் சினிமாவிலிருந்து சின்ன பிரேக் எடுத்தார்.
இதையும் படிங்க: யூத் பார்ட் 2 தனுஷ் சாரை வெச்சி எடுக்குறேனா?.. எனக்கு அவர பாத்தாலே பயம் – கென் கருணாஸ்!
பின் தமிழில் மக்களிடையே இவருக்கு பிரபலத்தை பெற்றுக்கொடுத்த படம்தான் சேது. பாலாவின் இயக்கத்தில் வெளியான இதில் வித்தியாசமான ரோலில் நடித்து விக்ரம் பிரபலமானார். இதையடுத்து இயக்குநர்கள் மணிரத்னம், சங்கர் என பிரம்மாண்ட இயக்குநர்களின் படங்களிலும் கதாநாயகனாக நடித்திருந்தார். இது இவருக்கு பின் இந்திய பிரபலத்தை கொடுத்தது. அந்த வகையில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் நடிப்பில் இறுதியாக வீர தீர சூரன் படம் வெளியானது. இதையடுத்து சியான் 63, மற்றும் சியான் 64 போன்ற படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.