சாய் பல்லவியின் சிறப்பான நடிப்பில் வந்த கார்க்கி படம் 4 ஆண்டுகளைக் கடந்தது – படக்குழு வெளியிட்ட பதிவு!
4 Years Of Gargi Movie | நடிகை சாய் பல்லவியின் அற்புதமான நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் கார்கி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவரது நடிப்பு ரசிகர்களிடையே அதிக அளவில் பாராட்டுகளைப் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகை சாய் பல்லவி கதையின் நாயகியாக நடித்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் கார்கி. இந்தப் படம் கடந்த 15-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. லீகல் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் ராமசந்திரன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்படி நடிகர்கள் காளி வெங்கட், ஆர்.எஸ்.சிவாஜி, சரவணன், லிவிங்ஸ்டன், ஜெயபிரகாஷ், கவிதாலயா கிருஷ்ணன், ராஜலட்சுமி பி. காலேஷ் ராமானந்த், சுதா எஸ், பிரதாப், ரெஜின் ரோஸ், நக்கலைட்ஸ் தனம், பிரஜுனா சாரா, பிகில் சிவா, மகேந்திர முல்லத் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.




சாய் பல்லவியின் சிறப்பான நடிப்பில் 4 ஆண்டுகளைக் கடந்தது கார்க்கி படம்:
இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி ஒரு சாதுவான பள்ளி ஆசிரியராக இருப்பார். அமைதியான குடும்பம் அப்பா, அம்மா மற்றும் தங்கை என வாழ்ந்து வரும் அவரது வாழ்க்கையில் எதிர்பாராத இடி போல ஒரு சம்பவம் நடக்கிறது. அது என்ன என்றால் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாட்ச்மேனாக உள்ள சாய் பல்லவியின் தந்தை ஒரு போக்சோ வழக்கில் கைது செய்யப்படுகிறார். அந்த வழக்கிற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் நீதி வேண்டி நடிகை சாய் பல்லவி எடுக்கும் முயற்சிகளில் அவர் பல விசயங்களை தெரிந்துகொள்கிறார். இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவியின் சிறப்பான நடிப்பை பாராட்டி பல விருதுகளும் கிடைத்தது. படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படக்குழு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Also Read… AK64 Movie: அஜித் குமாரின் AK64 படத்தில் இணையும் பேமஸ் நடிகை.. அட அவர்தான்!
கார்கி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The toughest choices require the strongest will to go through with it ❤️🔥
4 years since truth triumphed over silence and injustice #Gargi ⚖ #4YearsOfGargi@Sai_Pallavi92 @prgautham83 @Suriya_offl #Jyotika @rajsekarpandian @blacky_genie @SakthiFilmFctry @AishuLekshmi… pic.twitter.com/B67o6K9xU2
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) July 15, 2026
Also Read… நேரம் மாற்றம் செய்யப்பட்ட ஜீ தமிழ் தொடர்கள்.. எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?