AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜூலை 23ஆம் தேதி வெளியாகிறது முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம்.. படக்குழு அறிவிப்பு..

தணிக்கைச் சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. பல்வேறு தேதிகள் குறித்து தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது ஜூலை 23-ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

ஜூலை 23ஆம் தேதி வெளியாகிறது முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம்.. படக்குழு அறிவிப்பு..
திரையரங்கில் வெளியாகும் ஜன நாயகன் படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 15 Jul 2026 15:51 PM IST

ஜூலை 15, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்‘ வருகிற ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக, இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் (சென்சார்) கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு கட்ட சிக்கல்களைத் தாண்டி கடந்த வாரம் மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியது. படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலை 23ஆம் தேதி வெளியாகும் ஜன நாயகன் திரைப்படம்:


தணிக்கைச் சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. பல்வேறு தேதிகள் குறித்து தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது ஜூலை 23-ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

Also Read: விமான நிலையத்தில் ரசிகர் கொடுத்த விபூதி… ரஜினிகாந்த் செய்த கியூட் சம்பவம்!

‘ஜனநாயகன்’ திரைப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கியுள்ளார். இதில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். அரசியலில் முழுமையாக கவனம் செலுத்தி வரும் முதலமைச்சர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படம் என்பதால், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

முன்னதாக ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாத நிலையில், மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு படத்தில் இடம்பெற்றிருந்த சில காட்சிகள் மற்றும் வசனங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்று படக்குழுவுக்கு அறிவுறுத்தியிருந்தது.

3 மண்இ நேர படம்:

குறிப்பாக, “தமிழக வெற்றிக் கழகம்” என்று இடம்பெறும் வசனங்களை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும், “ஷீலா ராணி” என்ற பெயர் இடம்பெறும் அனைத்து காட்சிகளிலும் அந்தப் பெயரை மாற்றவோ அல்லது மியூட்  செய்யவோ வேண்டும் என்றும் தணிக்கைக் குழு தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, தேவையான மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், கடந்த வாரம் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தப் படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதுடன், திரைப்படத்தின் மொத்த நீளம் 183.3 நிமிடங்கள் என தணிக்கைச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்தப் படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் 3 நிமிடங்கள் ஓடும் திரைப்படமாகும்.

விரைவில் தொடங்கும் டிக்கெட் புக்கிங்:

முன்னதாக, ஜூலை 24-ஆம் தேதி திரையரங்குகளில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. ஆனால், ரசிகர்கள் மத்தியில் திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருப்பதை கருத்தில் கொண்டு, ஒரு நாள் முன்னதாகவே, அதாவது ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனம் படத்தின் புதிய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு விரைவில் தொடங்கும் என்றும், அதற்கான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us