AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அட எதிர்பார்க்காத எவிக்ஷன்.. பிக் பாஸில் இந்த வாரம் வெளியேறும் நபர் யார் தெரியுமா?

Bigg Boss Eviction this week: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது 9வது வாரத்தில் இறுதியில் உள்ளது. இந்நிலையில் இது தீபாவளி வாரம் என்ற நிலையில், எவிக்ஷன் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரபல பெண் போட்டியாளர் ஒருவர் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் யார் என விவரமாக பார்க்கலாம்.

அட எதிர்பார்க்காத எவிக்ஷன்.. பிக் பாஸில் இந்த வாரம் வெளியேறும் நபர் யார் தெரியுமா?
பிக் பாஸ் எவிக்ஷன் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 07 Nov 2026 10:32 AM IST

தமிழ் சின்னத்திரை நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவது பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது தமிழில் ஆண்டுதோறும் ஒளிபரப்பப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது கடந்த செப்டம்பர் 6ம் தேதி முதல் தொடங்கியிருந்தது. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமாகி கிட்டத்தட்ட 62 நாட்களை கடந்துள்ளது. 9வது வாரத்தின் இறுதியில் இந்த நிகழ்ச்சியானது இருக்கும் நிலையில், இந்த வாரம் தீபாவளி வாரம். அதனால் எவிக்ஷன் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டுவந்தது.

கடந்த வாரத்தில் கரீஷ்மா ஓட்டு எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், அவர் வெளியேற்றப்பட்டிருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் எவிக்ஷன் இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு பெண் போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளாராம்.

இதையும் படிங்க: மக்கள் என் பக்கம் இருக்காங்க…. அரசியல் குறித்து முதன்முறையாக மனம் திறந்த தனுஷ் – விமர்சனங்களுக்கு பதில்

பிக் பாஸில் இந்த வாரம் வெளியேறிய பெண் போட்டியாளர்:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மொத்தம் 19 போட்டியாளர்களுடன் தொடங்கியது. முதல் வாரத்தின் முதலே எவிக்ஷன் இருந்த நிலையில், தொடக்கத்தில் 3 வாரத்தில் 6 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். பின் அவர்கள் எல்லாருமே உள்ளே நுழைந்திருந்தனர். மேலும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக டிடிஃஎப் வாசன், கரீஷ்மா மற்றும் அக்ஷிதா அசோக் போன்ற போட்டியாளர்கள் நுழைந்தனர்.

இதையும் படிங்க: பிக் பாஸ் சீக்ரட் டாஸ்க்.. முனியம்மாள் மீது சந்தேகப்படும் டிடிஃஎப் வாசன் – ப்ரோமோ வைரல்!

தற்போது இந்த போட்டியிலிருந்து அக்ஷிதா அசோக் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த நிலையில், அவருக்கு ஆரம்பத்திலிருந்தே மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் இருந்தது. தற்போது அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

அக்ஷிதா அசோக் தமிழில் பல சின்னத்திரை சீரியல்களில் இணைந்து நாயகியாக மற்றும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் இவரும் பிக் பாஸில் இருக்கும் அவினாஷ் அசோக்கும் அண்ணன் தங்கை ஆவார்கள். தற்போது வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அக்ஷிதா வாக்குகள் எண்ணிக்கையின்படி வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த தகவல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us