AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

FIFA World Cup 2026: ஃபிஃபா காலிறுதியில் 8 அணிகள்.. எந்த அணி யாருடன் மோதுகிறது..? முழு அட்டவணை இதோ!

FIFA World Cup 2026 Quarter Finals: பிரான்ஸ், நார்வே, ஸ்பெயின், மொராக்கோ, பெல்ஜியம், இங்கிலாந்து, அர்ஜென்டினா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய 8 அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. 16 அணிகள் சுற்றின் கடைசி 2 போட்டிகளில், அர்ஜென்டினா எகிப்தை (3-2) என்ற கோல் கணக்கிலும், சுவிட்சர்லாந்து கொலம்பியாவை பெனால்டி ஷூட் அவுட்டில் (4-3) என்ற கோல் கணக்கிலும் தோற்கடித்தன.

FIFA World Cup 2026: ஃபிஃபா காலிறுதியில் 8 அணிகள்.. எந்த அணி யாருடன் மோதுகிறது..? முழு அட்டவணை இதோ!
ஃபிஃபா உலகக் கோப்பை காலிறுதி அட்டவணை
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 Jul 2026 19:14 PM IST

2026 ஃபிஃபா உலகக் கோப்பை 2026 (FIFA World Cup 2026) சீசனை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது. இந்த 2026ம் ஆண்டு உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக மொத்தம் 48 அணிகள் பங்கேற்றன. ஃபிஃபா உலகக் கோப்பையின் நாக்-அவுட் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இதில், பல ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சிகரமான போட்டிகள் கால்பந்து ரசிகர்களுக்கு விருந்தாகவும், சோகமாகவும் அமைந்தது. அதன்படி, போட்டியை நடத்தும் 3 நாடுகளும் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டன. காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கான போட்டியில் 3 நாடுகளும் தோல்விகளைச் சந்தித்தன. இந்தத் தோல்விகளால், போட்டியை நடத்தும் நாடான அமெரிக்கா (USA), கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் சாம்பியன் பட்டத்திற்கான போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

ALSO READ: கலக்கிய கோல் கீப்பர்.. 72 ஆண்டுகளுக்குப் பிறகு! காலிறுதிக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து..!

ஃபிஃபா உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டிகளில் 8 அணிகள்

பிரான்ஸ், நார்வே, ஸ்பெயின், மொராக்கோ, பெல்ஜியம், இங்கிலாந்து, அர்ஜென்டினா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய 8 அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. 16 அணிகள் சுற்றின் கடைசி 2 போட்டிகளில், அர்ஜென்டினா எகிப்தை (3-2) என்ற கோல் கணக்கிலும், சுவிட்சர்லாந்து கொலம்பியாவை பெனால்டி ஷூட் அவுட்டில் (4-3) என்ற கோல் கணக்கிலும் தோற்கடித்தன.

ஃபிஃபா உலகக் கோப்பை 2026 காலிறுதிப் போட்டிகளின் அட்டவணை

  • பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையேயான காலிறுதிப் போட்டி, 2026 ஜூலை 10ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 1:30 மணிக்கு பாஸ்டன் ஸ்டேடியத்தில் நடைபெறும்.
  • ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையேயான போட்டி, 2026 ஜூலை 11ம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 12:30 மணிக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெறும்.
  • நார்வே மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி 2026 ஜூலை 12ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 2:30 மணிக்கு மியாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
  • அர்ஜென்டினா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி 2026 ஜூலை 12ம் தேதி காலை 6:30 மணிக்கு கேன்சஸ் சிட்டி ஸ்டேடியத்திலும் நடைபெறும்.

அழுகையுடன் வெளியேறிய ரொனால்டோ மற்றும் நெய்மர்:

2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் 16-வது சுற்றின் காலிறுதிக்கு முந்தைய போட்டிகளில் ரொனால்டோ மற்றும் நெய்மர் ஏமாற்றத்துடன் வெளியேறினர். நார்வேயிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த பிரேசில், முதலில் போட்டியிலிருந்து வெளியேறியது. இதைத் தொடர்ந்து, பிரேசிலின் நட்சத்திர கால்பந்து வீரரான நெய்மர், சர்வதேசப் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார்.

ALSO READ: அமெரிக்கா, மெக்சிகோ, கனடா… ஃபிஃபாவில் வெளியேறிய போட்டியை நடத்தும் 3 நாடுகள்!

இதற்கிடையில், ஸ்பெயின் அணி போர்ச்சுக்கலை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தபோது கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மனம் உடைந்தது. இது ரொனால்டோவின் கடைசிப் போட்டியாகும், மேலும் ரொனால்டோ உட்பட அவரது ரசிகர்கள் அனைவரும் இந்த ஆண்டு பட்டத்தை போர்ச்சுக்கல் வெல்ல வேண்டும் என்று விரும்பினர், ஆனால் ஸ்பெயின் அணி ரொனால்டோ மற்றும் அவரது ரசிகர்களின் நம்பிக்கைகள் இரண்டையும் தகர்த்தது.

Follow Us