மு.க.ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் பரபரப்பு நோட்டீஸ்.. பின்னணியில் ஆதவ் அர்ஜூனா தொடுத்த வழக்கு.. என்ன காரணம்!
High Court Issued Notice To M. K. Stalin : ஜான் பிரிட்டோவுடன் தொடர்பு படுத்தி அவதூறாக பேசியதாக ஆதவ் அர்ஜூனா தொடுத்த வழக்கில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக தகவல் தொழில்நுட்ப அணிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தமிழகத்தில் ரூ. 285 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜான் பிரிட்டோ என்பவருக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்ததது. இவருடன், பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி முன்னாள் முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழில்நுட்ப அணியும் அவதூறான கருத்து தெரிவித்ததாக தெரிகிறது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும் முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி செயல்பட்டுள்ளது.
ரூ. 1 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும்
இதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த விவகாரத்தில், தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக முன்னாள் முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் ரூ. 1 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜான் பிரிட்டோ என்பவருக்கும், தனக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. இதில், தன்னை தொடர்பு படுத்தி தவறான தகவல்கள் பரப்பப்பட்டு உள்ளதாக அந்த மனுவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்து இருந்தார்.
மேலும் படிக்க: நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்.. டெல்லி விரைந்த 4 தமிழ்நாடு அமைச்சர்கள்… மீட்புப் பணிகளில் வேகம்!!




மு.க.ஸ்டாலின்- திமுக ஐ.டி. விங்குக்கு நோட்டீஸ்
இந்த மனு மீதான விசாரணை இன்று வெள்ளிக்கிழமை ( ஆகஸ்ட் 28- ஆம் தேதி) சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை விசாரித்த நீதிபதி முன்னாள் முதல்- அமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணிக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பான பதிலை அடுத்த மாதம் செப்டம்பர் 15- ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மு. க. ஸ்டாலின் மற்றும் திமுக தகவல் தொழில்நுட்ப அணிக்கு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
ஆதவ் அர்ஜூனா தரப்பில் சட்டப்பூர்வமான நோட்டீஸ்
இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு, ஆதவ் அர்ஜுனா தரப்பில் சட்டபூர்வமான நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான், உயர் நீதிமன்றமும் மு. க. ஸ்டாலினுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு.. சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் – அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம்..