AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather forecast: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை – வானிலை மையம் எச்சரிக்கை – எங்கெல்லாம் தெரியுமா?

Tamil Nadu weather today : தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 28, 2026 இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Tamil Nadu Weather forecast: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை – வானிலை மையம் எச்சரிக்கை – எங்கெல்லாம் தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 28 Aug 2026 16:08 PM IST

சென்னை, ஆகஸ்ட் 28 : மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஆகஸ்ட் 28, 2026 இன்று முதல் நான்கு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட தகவலின் படி, தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 28, 2026 இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஆகஸ்ட் 28, 2026 முதல் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 28, 2026 இன்று சென்னை, கடலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும், லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அமைச்சர் மரிய வில்சன் ஒன்றும் இங்கிலாந்து அரசர் கிடையாது.. பதவிக்கு வந்ததால் நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டாரா.. உயர்நீதிமன்றம் காட்டம்!

வானிலை மையம் வெளியிட்ட பதிவு

 

மேலும் ஆகஸ்ட் 28, 2026 இன்று முதல் வருகிற ஆகஸ்ட் 31, 2026 வரை 4 நாட்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு நாட்களுக்கு தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட கூடுதலாக 3 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இதன் ஒரு பகுதியாக வரும் ஆகஸ்ட் 31, 2026 வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகம் வரை சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிக்க : 11ம் வகுப்பு மாணவர்களுக்கு சர்ப்ரைஸ்.. நவீன சைக்கிளுடன் ஹெல்மெட், வாட்டர் பாட்டில்.. தமிழக அரசு அதிரடி!!

சென்னையைப் பொறுத்தவரை ஆகஸ்ட் 28, 2026 இன்று மற்றும் ஆகஸ்ட் 29, 2026 நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us