AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீடிக்கும் மழை.. வெப்பநிலை எப்படி இருக்கும்?

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஓரிரு பகுதிகளில் மட்டும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீடிக்கும் மழை.. வெப்பநிலை எப்படி இருக்கும்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Aug 2026 06:25 AM IST

ஆகஸ்ட் 28, 2026: தமிழகத்தில் மழைக்கான வாய்ப்புகள் சற்று குறைந்து வரும் சூழலில், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 39.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தொடர்ந்து பரங்கிப்பேட்டையில் 38.2 டிகிரி செல்சியஸ், மதுரையில் 38.4 டிகிரி செல்சியஸ், கரூரில் 37.5 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 36.2 டிகிரி செல்சியஸ், நுங்கம்பாக்கத்தில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

உள் தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை:

வரும் நாட்களில் வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும் படிக்க: ஆபாச படத்தை காட்டி ஆசைக்கு இணங்குமாறு மிரட்டல்.. சென்னையில் பெண் அளித்த புகாரில் முன்னாள் காதலனுக்கு சிறை!

மழைக்கான வாய்ப்புகளைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் 28ஆம் தேதியான இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீடிக்கும் மழை:

அதேபோல், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நீர்வளத்துறை டெண்டர்களில் ரூ. 42 லட்சம் குளறுபடியா.. குண்டை தூக்கி போட்ட நயினார் நாகேந்திரன்!

ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மேற்கு மாவட்டங்களில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. செப்டம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஓரிரு பகுதிகளில் மட்டும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us