நெல்லையில் தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் படுகொலை – வீட்டுமுன் தலையை வீசி சென்றதால் பரபரப்பு
Tirunelveli Murder Shock : திருநெல்வேலி மாவட்டம் உடையார்பெட்டி அருகே மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் அந்த பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்று அவர் தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றபோது மர்ம நபர்கள் அவரை தாக்கி படுகொலை செய்துள்ளனர்.
திருநெல்வேலி, ஆகஸ்ட் 30 : திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரத்தில் பாஸ்கர் என்ற இளைஞர் தலை துண்டித்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரது தலையை அறுத்து அவரது வீட்டின் முன்பே மர்ம நபர்கள் வீசி சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், அப்பகுதி முழுக்க உச்சகட்ட பரபரப்பாக காணப்படுகிறது.
நெல்லையில் தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் படுகொலை
அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது உடலை கைப்பற்றி தச்சநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : மதுரையில் 1000 கோடி மோசடி… திணறும் போலீஸ்… சதுரங்க வேட்டையை மிஞ்சிய சம்பவம்




திருநெல்வேலி மாவட்டம் உடையார்பெட்டி அருகே மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் அந்த பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ஆகஸ்ட் 30, 2026 பாஸ்கர் வழக்கம் போல் தனது வீட்டிலிருந்து குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் 2 பேர், பாஸ்கரை வழிமறித்து திடீரென தாக்கியுள்ளனர். திடீர் தாக்குதலால் பாஸ்கர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து சற்று எதிர்பாராத நேரத்தில் அவர்கள் கொண்டு வந்திருந்த பயங்கர ஆயுதங்களால் பாஸ்கர் மீது கொலை வெறி தாக்கியுள்ளனர். மேலும் அதோடு நிற்காமல் படுகொலை செய்யப்பட்ட அந்த பாஸ்கரின் தலையை அறுத்து, அவரது வீட்டின் முன்பே வீசி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பாஸ்கர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தச்சநல்லூர் போலீசார் பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதற்கிடையே, கொலையை அரங்கேற்றிய அந்த இரு நபர்களும் நேராக காவல் நிலையம் சென்று போலீசாரிடம் சரணடைந்தனர்.
இதையும் படிக்க : சிசிடிவி இருந்தும்எந்த பயனும் இல்லை… கோவையில் பைக் திருட்டு வழக்கில் திணறும் போலீஸ்
முதற்கட்ட விசாரணையில் பாஸ்கருக்கும் சரணடைந்தவர்களுக்கு முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் பாஸ்கர் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை காரணமாக அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.