AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிரதமர் மோடி குறிப்பிட்ட வெப்சைட்.. உள்ளூர் தயாரிப்பு கோரிக்கை.. மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசியது என்ன?

PM Modi Praises Mumbai Man : மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடிகுறிப்பிட்ட வெப்சை குறித்து பேசினார். அதில் இந்தியாவின் தகவல்கள் ஆண்டுகள் வாரியாக இருப்பதை அவர் குறிப்பிட்டார். மேலும், போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீள்வது முதல் தூய்மைப் பணிகளில் பங்கேற்பது வரையிலான இளைஞர்களின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.

பிரதமர் மோடி குறிப்பிட்ட வெப்சைட்.. உள்ளூர் தயாரிப்பு கோரிக்கை.. மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசியது என்ன?
பிரதமர் மோடி
C Murugadoss
C Murugadoss | Published: 31 Aug 2026 09:45 AM IST

பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் 137வது அத்தியாயத்தில் ஆகஸ்ட் 30ம் தேதி உரையாற்றினார். அதில் நமது நாட்டு மக்களின் புதுமையான யோசனைகளை விவாதிக்கும் ஒரு தளம் பற்றி பிரதமர் குறிப்பிட்டார். இந்த இணையதளத்திற்குச் சென்று ஏதேனும் ஒரு ஆண்டைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு, அந்த நேரத்தில் இந்தியாவின் எந்தப் பகுதியை யார் ஆண்டார்கள் என்பதை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம். தனக்கும் அந்த யோசனை பிடித்திருந்ததாகவும், அதுபற்றி மேலும் அறிந்துகொண்டதாகவும் பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி மேலும் கூறுகையில், “இந்தப் பணியை மும்பையைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவர் செய்துள்ளார். கிருஷ்ணா அந்த இணையதளத்தின் பெயரையும் மிகவும் எளிமையாக வைத்துள்ளார். அதன் பெயர் WWW.BHARATRAJYA.com” என்றார்.

நாட்டில் போதை மீட்பு இயக்கம்

மேலும் குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, “வளர்ந்த இந்தியாவிற்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள்… இந்த இயக்கம் தற்போது நாடு முழுவதும் வேகமாக முன்னேறி வருகிறது. இதன் நோக்கம் தெளிவானது: போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள், போதைப்பொருள் இல்லாத இந்தியா.” எனக் குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில் “’பிரதம மந்திரி ஸ்வநிதி யோஜனா’ மூலம் லட்சக்கணக்கான தாய்மார்களும் சகோதரிகளும் புதிய வலிமையைப் பெறுகிறார்கள். ‘பெண்கள் அதிகாரமளித்தல்’ என்ற இந்த அம்சம், பேசப்பட வேண்டிய அளவுக்குப் பேசப்படுவதில்லை. ‘பிரதம மந்திரி ஸ்வநிதி யோஜனா’ திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 46 சதவீதம் பேர் பெண்கள். இதன் பொருள், நாடு முழுவதும் சுமார் 3.5 மில்லியன் பெண்கள் இந்தத் திட்டத்தில் இணைந்து தங்கள் தொழில்களை வளர்த்து வருகின்றனர்” என்றார்.

Also Read: உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தார் பிரதமர் மோடி.. உற்சாக வரவேற்பு

இரண்டு இளைஞர்கள்

பிரதமர் மோடி கூறியதாவது, “உத்தரப் பிரதேசத்தின் ராம்பூரில் பட்வாய் என்ற கிராமம் உள்ளது. அங்கு, ஆகாஷ் மற்றும் ரோகன் என்ற இரு நண்பர்கள், தங்களைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் அசுத்தமாக இருப்பதைக் கவனித்தனர். ஆகாஷும் ரோகனும் குப்பைப் பைகளை எடுத்துக்கொண்டு சுத்தம் செய்யப் புறப்பட்டனர். படிப்படியாக, மற்ற இளைஞர்களும் அவர்களுடன் இணைந்தனர். ‘கிளீன்-அப் பட்வாய்’ என்ற பெயரில் ஒரு குழு உருவாக்கப்பட்டது. இந்த இளைஞர்கள் இதுவரை நான்கு கங்கை படித்துறைகளை சுத்தம் செய்து, ஒரு டன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியுள்ளனர். என்று பாராட்டுகளை தெரிவித்தார்.

உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை

பிரதமர் நரேந்திர மோடி வரவிருக்கும் பண்டிகைக் காலம் குறித்தும் பேசினார். ஆயுத பூஜை மற்றும் தீபாவளி நெருங்கி வருவதாகவும், எனவே ‘உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு’ என்ற கொள்கையை நாம் மனதில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Follow Us