AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஐரோப்பாவின் மிகப்பெரிய சிகரத்தின் மீது ஏறிய இந்திய பெண்.. 43 வயதில் சாதனை.. குவியும் பாராட்டுக்கள்!

Indian Woman Climbed Highest Peak Of Europe | ஐரோப்பாவில் உள்ள மிக உயரமான சிகரத்தை இந்திய பெண் ஒருவர் தனது 43 வயதில் ஏறி சாதனை படைத்துள்ளார். அந்த பெண் யார், அவர் செய்த சாதனை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய சிகரத்தின் மீது ஏறிய இந்திய பெண்.. 43 வயதில் சாதனை.. குவியும் பாராட்டுக்கள்!
சாதனை படைத்த இந்திய பெண்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 31 Aug 2026 08:45 AM IST

லக்னோ, ஆகஸ்ட் 31 : ஐரோப்பாவின் (Europe) மிக உயரமான சிகரத்தின் மீது ஏறி இந்திய பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். சிறு வயது முதலே சாகசங்கள் மீது அதீத ஆர்வம் கொண்டு இருந்த அவர், இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த நிலையில், இந்த சாதனையை படைத்த அந்த இந்திய பெண் யார், அந்த பெண் என்ன செய்துள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

43 வயதில் இந்திய பெண் படைத்த வியத்தகு சாதனை

உத்தர பிரதேச மாநிலம், சீதாப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷிவானி. இவருக்கு 24 வயதில் திருமணம் நடந்த நிலையில், தற்போது தனது மகள் மற்றும் கணவருடன் மும்பையில் வசித்து வருகிறார். இந்த நிலையில், 43 வயதாகும் அவர், ஆகஸ்ட் 15, 2026 அன்று ஐரோப்பாவின் மிக உயரமான ரஷியாவின் “மவுண்ட் எல்பிரஸ்” மீது ஏறி, மூவர்ண கொடியை ஏற்றி சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க : டிவிஸ்ட் மேல டிவிஸ்ட்! குரூப் உயிருடன் இருக்காரா? உண்மை என்ன?

சவால்களை விரும்பும் ஷிவானி

சிறு வயது முதலே சவால்களை விரும்பும் நபராக ஷிவானி இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தான், சுமார் 5,642 அடி உயரம் கொண்ட அந்த சிகரத்தின் மீது ஏறி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஐரோப்பாவின் மிகவும் உயரமான சிகரத்தின் மீது ஏறிய பெண் என்ற சாதனையை அவர் தன்வசமாக்கியுள்ளார். அவருக்கு இந்தியா மட்டுமன்றி, உலகம் எங்கிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதையும் படிங்க : நேபாள வெள்ளத்தில் சிக்கிய 290 இந்தியர்கள்; தமிழகத்தைச் சேர்ந்த 86 பேர் மாயம்

சாதனை குறித்து பேசிய ஷிவானி

இந்த சாதனை குறித்து ஷிவானி பேசியதாவது, 10 நாட்கள் கொண்ட இந்த மலையேற்ற பயண, உடல் வலிமையை விட மன வலிமைக்கு தான் பெரும் சோதனையாக அமைந்தது. 5,000 கிலோ மீட்டர்களுக்கு மேல் ஆக்சிஜன் அளவு மிக குறைவாக இருந்தது. பனிப்பொழிவு, பலத்த காற்று, கடும் குளிர், கனமான உடைகள் என பல சவால்களை சந்திக்க வேண்டியது இருந்தது.

சிகரத்தை நோக்கி முன்னேறும்போது இடையில் நிறக் கூடாது. தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று எனக்குள் மந்திரம் போல திரும்ப திருமப் சொல்லிக்கொண்டே என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us