டிவிஸ்ட் மேல டிவிஸ்ட்! குரூப் உயிருடன் இருக்காரா? உண்மை என்ன?
Viral Photo Twist : கேரளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளியான குரூப் என்று அழைக்கப்படும் சுகுமார குரூப்பின் புகைப்படம் என வயதான ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் அந்த புகைப்படம் குறித்த உண்மை தற்போது வெளியாகியுள்ளது.
கேரளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளியான குரூப் என்று அழைக்கப்படும் சுகுமார குரூப்பின் புகைப்படம் என வயதான ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அவர் உயிருடன்மலேசியாவில் வசித்து வருவதாகவும தகவல்கள் பரவின. இந்த நிலையில் வைரலாகும் பரவும் புகைப்படத்தில் இருப்பது குரூப் இல்லை என்பதும் போட்டோவில் இருப்பது தாமோதர மேனன் என்பவர் தான் என கேரள காவல்துறையின் சிறப்பு பிரிவு ஏசிபி தெரிவித்துள்ளார். குரூப் என்ற பெயரில் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு சுகுமாரன் குரூப்பின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
குரூப் உயிருடன் இருக்காரா?
துல்கர் சல்மான் நடித்த குரூப் படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு தான் சுகுமார குரூப் குறித்து கேரள தாண்டி இந்தியா முழுவதும் பிரபலமானது. இந்த நிலையில் சுகுமார குரூப் என்ற பெயர் மீண்டும் பிரபலமாகியுள்ளது. காரணம் அவர் இருப்பதாக கூறப்படும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவர் மலேசியாவில் வேறு பெயரில் புதிய அடையாளங்களுடன் வாழ்ந்து வருவதாகவும் தகவல் பரவின. இது கேரள மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தின.
இதையும் படிக்க : வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை! கிலோ ரூ.35க்கு விற்பனை செய்ய திட்டம்..




பல ஆண்டுகளுக்கு முன்பு நீரில் மூழ்கி இறந்ததாகக் கருதப்பட்ட தலைமறைவு குற்றவாளி சுகுமார குரூப் என்று கூறி பரப்பப்பட்ட புகைப்படம், உண்மையில் திருச்சூர் வடக்கஞ்சேரியைச் சேர்ந்த தாமோதரன் மேனனுடையது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பரப்பப்பட்ட புகைப்படம் சுகுமார குரூப் உடையது அல்ல, அது தங்கள் உறவினரான தாமோதர மேனனுடையது என்று அவரது உறவினர்களும் ஆகஸ்ட் 28, 2026 இன்று முன்வந்து தெரிவித்தனர்.
இது ஆரம்பகட்ட விசாரணையின் முடிவாக இருந்தாலும், இச்சம்பவம் குறித்துத் தெளிவுபடுத்த விரிவான விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. சிறப்புப் பிரிவு ஏசிபி தாமோதர மேனனிடம் தொலைபேசியில் பேசியதாகவும், அவர் தான் வீட்டிற்குத் திரும்ப முயற்சிப்பதாகக் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு நாட்களாக, அந்தப் புகைப்படம் சுகுமார குரூப் உடையது என்று செய்தி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டது. சுகுமார குரூப் வேறு பெயரில் மலேசியாவில் வசித்து வருவதாகத் தகவல்கள் பரப்பப்ட்டன.
சுகுமார குரூப் இறந்துவிட்டதாகக் குற்றப்பிரிவு முடிவு செய்து வழக்கை முடித்து வைத்திருந்தது. அதற்குப் பிறகுதான், அந்தப் புகைப்படம் சுகுமார குரூப் உடையது என்று பரப்பப்பட்டது. சுகுமார குரூப் உயிருடன் இருப்பதாகவும், பல ஆண்டுகளாக புருனேவில் வேறு பெயரில் வசித்து வருவதாகவும் செய்திகள் பரவின. இதன் மூலம் சுகுமார குரூப் வழக்கு மீண்டும் உயிர்பெற்றுள்ளது.
இதையும் படிக்க : நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வேலையின்மை.. திடீர் ட்ரெண்டிங்கில் உண்மைச் சரிபார்ப்பு குழு!
வெளியான தகவல்களின் அடிப்படையில் இன்டர்போல் மூலமாகவும் விவரங்களைச் சரிபார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகுமார குரூப் குறித்துக் கேட்கப்படும் அனைத்தும் வெறும் வதந்திகள் என்றும், அத்தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா முன்னதாகத் தெளிவுபடுத்தியிருந்தார். சுகுமார குரூப் விவகாரம் கேரளக் காவல்துறைக்கு மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்திய ஒன்றாகும். குரூப் தொடர்பான விசாரணை கடந்த 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிடிபடாமல் தலைமறைவாக இருக்கும் குரூப்பைத் தேடி காவல்துறை பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் குரூப் தென்பட்டதாக வதந்திகள் பரவியதையடுத்து, காவல்துறை அங்கு நேரில் சென்று விசாரணையும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.