சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து – அமைச்சர் வன்னியரசுவின் சகோதரி மீது வழக்குப்பதிவு
Sattur Firecracker Factory Blast: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்த வழக்கில் 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் அமைச்சர் வன்னியரசுவின் சகோதரியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர், செப்டம்பர் 6 : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்த வழக்கில் 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் அமைச்சர் வன்னியரசுவின் சகோதரியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆலை மேலாளரை கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய 3 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அமைச்சர் வன்னியரசுவின் சகோதரி மீது வழக்குப்பதிவு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒத்தையால் என்ற கிராமத்தில் தமிழ அமைச்சர் வன்னியரசுவின் சகோதரி ஜெயசக்திக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பட்டாசு ஆலையில் செப்டம்பர் 5, 2026 நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். அதிகப்படியான பட்டாசுகளை உற்பத்தி செய்ய சொல்லி தொழிலாளர்கள் வற்புறுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே இந்த விபத்து நடந்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறு – தாயே குழந்தைகளை கொன்றது அம்பலம் – அதிர்ச்சி தகவல்




இந்த விபத்து குறித்து கிராம நிர்வாக அளித்த புகாரின் பெயரில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசுவின் சகோதரி ஜெயசக்தி, அவரது மகள் செல்வமாரி, செல்வமாரியின் கணவர் முரளீஸ்வரன், ஆலை மேலாளர் சூர்ய பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது சாத்தூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், ஆலை மேலாளர் சூர்ய பிரகாஷை போலீஸார் செப்டம்பர் 6,2026 இன்று கைது செய்தனர்ர். மற்ற 3 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
பட்டாசு ஆலையில் வேலை செய்யும் நபர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதேபோல், அதிகப்படியான பட்டாசுகளை உற்பத்தி செய்ய சொல்லி தொழிலாளர்கள் வற்புறுத்தப்பட்டுள்ளனர். வெடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் எனத் தெரிந்திருந்தும் இவ்வாறு நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒத்தையால் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதல்வர் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். இது தடொர்பாக முதல்வர் விஜய்யின் எக்ஸ் பதிவில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், ஒத்தையால் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணியிலிருந்த மீனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி அறிந்து மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
இதையும் படிக்க : புதிய டாஸ்மாக் கடைகளுக்கு கிராம சபையின் ஒப்புதல் – முதல்வர் விஜய்க்கு கமல்ஹாசன் யோசனை
இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.