சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து – அதிர்ச்சி தகவல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஜூன் 28, 2026 இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. ரசாயன பொருட்களில் ஏற்பட்ட வேதியியல் மாற்றத்தால் வெடி விபத்து ஏற்பட்டு 10க்கும் மேலான அறைகள் சேதமடைந்துள்ளது. விடுமுறை தினம் என்பதால் பட்டாசு ஆலை மூடப்பட்டிருந்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
விருதுநகர், ஜூன் 28 : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஜூன் 28, 2026 இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. ரசாயன பொருட்களில் ஏற்பட்ட வேதியியல் மாற்றத்தால் வெடி விபத்து ஏற்பட்டு 10க்கும் மேலான அறைகள் சேதமடைந்துள்ளது. விடுமுறை தினம் என்பதால் பட்டாசு ஆலை மூடப்பட்டிருந்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை வட்டத்தில் மூர்த்திநாயக்கம்பட்டியில தனியார் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் ஜூன் 28, 2026 இன்று திடீரென எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் வானில் வெகு தூரத்திற்கு புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் அலறியடித்தபடி வீட்டை விட்டு வெளியேறினர். விடுமுறை தினம் என்பதால் இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் – அதிக ரத்தப்போக்கு… பெண் பரிதாப மரணம்




இந்த விபத்து குறித்து தகவலறிந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொதுவாக ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் பட்டாசு ஆலையில் ஜூன் 28, 2026 இன்று தொழிலாளர்கள் யாரும் இல்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி ஆலையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். வெடி விபத்து குறித்து காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலையில் இருந்த ரசாயன பொருட்களில் ஏற்பட்ட வேதியல் மாற்றத்தின் காரணமாக இந்த வெடி விபத்து ஏற்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த வெடி விபத்தில், பட்டாசு ஆலையில் இருந்த வெடிமருந்து கிடங்கு உள்ளிட்ட 8 அறைகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. சேதத்தை கணக்கெடுக்கக்கூடிய பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இதையும் படிக்க : வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. விடிவதற்குள் நடந்த மர்மம்.. கிணற்றில் மிதந்த சடலம்..
கடந்த சில மாதங்களுக்கு முன் விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டியில் வனஜா பட்டாசு ஆலையில் கடந்த ஏப்ரல் 19, 2026 அன்று மதியம், ஆலையில், 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு 4 அறைகள் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் தொழிலாளர்கள் 21 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இப்படி தொடர்ந்து விருதுநகர், சிவகாசி சுற்று வட்டார பகுதிகளில் உயிர் இழப்புகள் ஏற்படுவது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.