AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னையில் அடுத்த பயங்கரம் – கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை – பிளஸ் 2 மாணவர் உட்பட 4 பேர் கைது

Another Murder in Chennai : சென்னையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 65 வயது கட்டிட தொழிலாளி அடித்து கொன்றதாக பிளஸ் 2 மாணவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணம் கொடுக்க மறுத்ததால் போதையில் இருந்த 4 பேரும் அவரை கொலை செய்தது தெரியவந்திருக்கிறது.

சென்னையில் அடுத்த பயங்கரம் – கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை – பிளஸ் 2 மாணவர் உட்பட 4 பேர் கைது
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 06 Sep 2026 14:52 PM IST

சென்னை, செப்டம்பர் 6 : சென்னையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 65 வயது கட்டிட தொழிலாளி அடித்து கொன்றதாக பிளஸ் 2 மாணவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட அபிஜித் பணம் கொடுக்க மறுத்ததால் போதையில் இருந்த 4 பேரும் அவரை மிகக் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கின்றனர். ஏற்கனவே சென்னையில் தவெக நிர்வாகி கொலை செய்யப்பட்டது சர்ச்சையான நிலையில் அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பணம் கேட்டு தர மறுத்த முதியவரை போதையில் இருந்த 4 இளைஞர்கள் கொலை செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க : சென்னையின் 2-வது விமான நிலையம்.. 2 புதிய இடங்களை தேர்வு செய்த தவெக அரசு.. எங்கு தெரியுமா?

முன்னதாக தவெகவை சேர்ந்த கண்ணன் என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள் சென்னையில் மற்றொரு கொலை சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் தவெகவில் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையல் செப்டம்பர் 6, 2026 நேற்று இரவு வண்ணாந்துறை பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்த சாஸ்திரி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. கொலை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணி உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. தீவிர விசாரணைக்குப் பிறகு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க : தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்.. பயணிகள் விரைந்து முன்பதிவு செய்ய தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்!!

இது தொடர்பாக பதிவிட்ட எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், செப்டம்பர் 7, 2026 நாளை முதல்வர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார். அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை!

தலைநகரிலேயே சாலையில், இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா? இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாகத் த.வெ.க. இருப்பதை நினைத்து வருந்துவதா? இதற்கும் தி.மு.க.வை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

Follow Us