AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதல்வர் அலுவலக மாற்றத்துக்கான டெண்டரில் முரண்பட்ட தகவல் – என்ன நடந்தது?

CM Office Relocation Tender : முதல்வர் அலுவலக இடமாற்றம் விவகாரம் தொடர்பாகடெண்டர் கோரப்பட்ட நிலையில் டெண்டரில் முரண்பட்ட தகவல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு வெளியிட்டிருந்த ஒப்பந்த தொகையைவிட ரூ.63 லட்சம் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஆர்டிஐ தகவலில் தெரிய வந்துள்ளது.

முதல்வர் அலுவலக மாற்றத்துக்கான டெண்டரில் முரண்பட்ட தகவல் – என்ன நடந்தது?
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 06 Sep 2026 19:00 PM IST

சென்னை, செப்டம்பர் 6 : முதல்வர் அலுவலக இடமாற்றம் விவகாரம் தொடர்பாகடெண்டர் கோரப்பட்ட நிலையில் டெண்டரில் முரண்பட்ட தகவல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு வெளியிட்டிருந்த ஒப்பந்த தொகையைவிட ரூ.63 லட்சம் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஆர்டிஐ தகவலில் தெரிய வந்துள்ளது. இந்த தகவல் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் அலுவலக மாற்றத்துக்கான டெண்டரில் முரண்பட்ட தகவல்

தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் அலுவலகம் தற்போது புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய்யின் அலுவலத்தை இடம் மாற்றம் செய்யவுள்ளது. இடப்பற்றாக்குறை காரணமாக அவரது அலுவலகம் மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் 2 கட்டிடங்கள் உள்ளன. தற்போது புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள பிரதான கட்டிடத்தில் முதல்வர் அலுவலகம் உள்ளது. மற்றொரு கட்டிடம் நாமக்கல் கவிஞர் மாளிகை ஆகும்.

இதையும் படிக்க : சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிப் படுகொலை.. இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!!

பிரதான கட்டிடத்தில் மூன்று தளங்கள் உள்ள நிலையில், இதில் அமைச்சர்களுக்கான அறைகள் உள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அலுவலகம் தற்போது புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இடப்பற்றாக்குறை, வாகன நிறுத்துமிட வசதி குறைபாடு மற்றும் புதிய கட்டிடங்களை அமைப்பதற்கான கட்டுப்பாடுகள் போன்றவை காரணமாக முதலமைச்சர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்ற அரசு சார்பில் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதையடுத்து, தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சருக்கான புதிய அலுவலகத்தை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு பொதுப்பணித்துறை ரூ.5.54 கோடியில் டெண்டர் வெளியிட்டிருந்தது.

இதையும் படிக்க : உள்ளாட்சித் தேர்தல் முதல் பொதுக்குழு வரை.. அதிமுக மா.செக்களுடன் இபிஎஸ் ஆலோசனை.. மூத்த நிர்வாகிகள் புறக்கணிப்பு..

இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான பணிகளுக்காக ரூ.6.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அரசு சார்புச் செயலாளருமான கரிகாலன் அளித்த பதிலில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஏற்கெனவே அரசு வெளியிட்டிருந்த ஒப்பந்தம் தொகையை விட ரூ.63 லட்சம் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தகவல் தெரிகிறது. முதல்வர் அலுவலகத்தை மாற்றுவதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக பொதுத்துறைச் செயலாளர் தலைமையில் தனியாக எந்தக் குழுவும் அமைக்கப்படவில்லை என்றும் RTI பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் செப்டம்பர் 1, 2026 அன்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வெளியாகியுள்ளது.

Follow Us