திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறு – தாயே குழந்தைகளை கொன்றது அம்பலம் – அதிர்ச்சி தகவல்
Tirupathur Double Murder : வாணியம்பாடி அருகே கிணற்றில் சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், திருமணத்துக்கு மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததாக கூறி 2 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய் கைது செய்யப்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர், செப்டம்பர் 6 : திருமணத்துக்கு மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததாக கூறி 2 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய் கைது செய்யப்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி அருகே 2 குழந்தைகள் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தாயே தனது குழந்தைகளை கொலை செய்ததது தெரிய வந்திருக்கிறது.
தாயே குழந்தைகளை கொன்றது அம்பலம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கடந்த ஆகஸ்ட் 30, 2026 அன்று விவாசய நிலத்தில் உள்ள கிணற்றில் 2 சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். 2 சிறுவர்களின் உடலும் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆலங்காயம் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் உதவியுடன் கூழந்தைகளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க : திடீர் மின் கட்டண உயர்வா?.. களத்தில் இறங்கும் மின்வாரியம்.. ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு!!




தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் உதவியுடன் சிறுவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, வேலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் விசாரணையில் 2 சிறுவர்களும் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனா மமரத்தூரில் உள்ள வெளிச்சனூர் பகுதியை சேர்ந்த சிவகாமி என்பவருடையது என தெரிய வந்தது. அவரை கைது செய்து விசாரித்ததில் தாயே தனது குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரிய வந்தது.
சிவகாமியின் கணவர் ஆந்திராவில் செம்மரக் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறார். இந்த சூழலில் சிவகாமிக்கும் அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஓட்டுநர் ராஜா என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ராஜாவிற்கு திருமணமாகி ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். இதற்கு இடையே சிவகாமியின் குழந்தைகள் இவர்களின் உறவுக்கு இடையூறாக இருப்பதாக கருதிய இருவரும், கிணற்றில் தள்ளி கொன்றுவிடலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.அப்போது தாங்கள் இருக்கும் பகுதியிலேயே கொலை செய்தால், போலீஸில் சிக்கிவிடுவோம் என எண்ணிய இருவரும், திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள பகுதியில் கொன்றுவிடலாம் என முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிக்க : சென்னையின் 2-வது விமான நிலையம்.. 2 புதிய இடங்களை தேர்வு செய்த தவெக அரசு.. எங்கு தெரியுமா?
அதைத்தொடர்ந்து, சிவகாமி 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஆலங்காயம் பகுதிக்கு வந்து பெத்தூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இருவரையும் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார் என்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கொலைக்கு உடைந்தையாக இருந்த ராஜாவையும் காவல்துறையினர் கைது செய்து, இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, திருப்பத்தூரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருமணத்தை மீறிய உறவுக்காக பெற்ற குழந்தைகளையே தாய் கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.