AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

புதிய டாஸ்மாக் கடைகளுக்கு கிராம சபையின் ஒப்புதல் – முதல்வர் விஜய்க்கு கமல்ஹாசன் யோசனை

Kamal Haasan Writes to CM Vijay : புதிய டாஸ்மாக் கடையைத் திறப்பதற்கு முன்பாக கிராம சபையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு எழுதியுள்ள கடிதத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.

புதிய டாஸ்மாக் கடைகளுக்கு கிராம சபையின் ஒப்புதல் – முதல்வர் விஜய்க்கு கமல்ஹாசன் யோசனை
முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 06 Sep 2026 15:42 PM IST

சென்னை, செப்டம்பர் 6 :  புதிய டாஸ்மாக் கடையைத் திறப்பதற்கு முன்பாக கிராம சபையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக முதல்வர் விஜய்க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,  தமிழ்நாடு தங்கள் தலைமையின் மீது நம்பிக்கை வைத்து, மாநிலத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் பொறுப்பைத் தங்களிடம் ஒப்படைத்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அடுத்த கிராம சபைக் கூட்டங்கள் 2 அக்டோபர் 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில், கிராம சபையை அடித்தள ஜனநாயகத்தின் மிகவும் அர்த்தமுள்ள மற்றும் பயனுள்ள அமைப்பாக மாற்றுவதற்கான சில ஆலோசனைகளைத் தங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கான மதிப்பூதியத்தை கணிசமாக உயர்த்துதல்.

கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் மக்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆவர்; மேலும் அவர்கள் குறிப்பிடத்தக்க பொறுப்புகளை வகிக்கின்றனர். தற்போது வழங்கப்படும் மதிப்பூதியம் முற்றிலும் போதுமானதாக இல்லை. எனவே, அரசு இந்த மதிப்பூதியத்தை கணிசமாக உயர்த்தி  நிர்ணயிக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : சென்னையின் 2-வது விமான நிலையம்.. 2 புதிய இடங்களை தேர்வு செய்த தவெக அரசு.. எங்கு தெரியுமா?

டாஸ்மாக்  கடைகளுக்கு கிராம சபையின் ஒப்புதல்

கிராமங்களில் உள்ள மதுபானக் கடைகள் தொடர்பான முடிவுகளில் உள்ளூர் மக்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். முறையாகக் கூட்டப்பட்ட கிராம சபை, ஏற்கனவே செயல்படும் டாஸ்மாக் கடைக்கு எதிராகத் தெளிவான மற்றும் உறுதியான எதிர்ப்பைத் தெரிவிக்கும் பட்சத்தில், அத்தீர்மானத்தின் மூலம் அந்தக் கடையின் செயல்பாட்டைத் தடுப்பதற்கான (veto) நடைமுறையை அரசு உருவாக்க வேண்டும் அதேபோல, ஒரு கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடையைத் திறப்பதற்கு முன்பாக கிராம சபையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

விழிப்புணர்வையும் பங்கேற்பையும் அதிகரித்தல்

கிராம சபையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும். பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிக்கவும் அரசு தொடர்ச்சியான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். ஒரு முன்னோடி முயற்சியாக, தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் சிறந்த கிராம சபைக் கூட்டங்களை, முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் நேரலையாக ஒளிபரப்பலாம்.

கிராம சபைத் தீர்மானங்களைச் திறம்படச் செயல்படுத்துவதை உறுதி செய்தல்

கிராம சபையின் நம்பகத்தன்மை என்பது கூட்டத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது. என்பதிலேயே தங்கியுள்ளது. கிராம சபைத் தீர்மானங்கள் மீது காலக்கெடுவுடன் கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்; அத்தீர்மானங்களின் செயல்பாட்டு நிலை குறித்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும். முந்தைய தீர்மானங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை. அடுத்தடுத்த கிராம சபைக் கூட்டங்களின் முக்கிய அங்கமாக அமைய வேண்டும்.

இதையும் படிக்க : தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்.. பயணிகள் விரைந்து முன்பதிவு செய்ய தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்!!

 உள்ளாட்சி நிர்வாகம் சார்ந்த திறன் மேம்பாடு

உள்ளாட்சி நிர்வாகம் சார்ந்த திறன் மேம்பாடு, பயிற்சி, ஆவணப்படுத்துதல் மற்றும் ஆராய்ச்சி ஆகிய அமைப்புகளை நாம் கணிசமாக வலுப்படுத்த வேண்டியுள்ளது. உள்ளாட்சி நிர்வாகம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்காக வலுவானதொரு நிறுவனத்தை அரசு உருவாக்க வேண்டும்.

கிராம மேம்பாட்டில் பங்கேற்பு சார்ந்த திட்டமிடலை நோக்கி நகர்தல்

கிராமங்கள் தங்கள் சொந்த மேம்பாட்டுத் தேவைகளைத் தாங்களே கண்டறிந்து முன்னுரிமைப்படுத்தும் ஒரு களமாக ‘கிராம சபை’ படிப்படியாக மாற வேண்டும்.

அடித்தள நிலையில் பொறுப்புக்கூறும் கலாச்சாரத்தை உருவாக்குதல்

கிராம சபையானது வெறும் சட்டப்பூர்வமான கூட்டமாக மட்டும் இல்லாமல், குடிமக்கள் கேள்வி கேட்கவும், விவாதிக்கவும், முன்னுரிமைப்படுத்தவும் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தைப் பொறுப்புக்கூற வைக்கவும் கூடிய ஒரு உண்மையான தளமாக உருவெடுக்க வேண்டும் இவ்வறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us