ஆபாச பேச்சு தான் DMK-வின் DNA.. மு.க.ஸ்டாலின் & உதயநிதியை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் ரமேஷ்!
Minister Ramesh Criticizes M. K. Stalin : பெற்ற மகனை முறையாக வளர்க்க தெரியதாவர் மு.க. ஸ்டாலின் என்றும், ஆபாச பேச்சு திராவிட முன்னேற்றக் கழகத்தின் டி. என். ஏ. என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விமர்சித்தார்.
திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தான் பெற்ற மகனையே முறையாக வளர்க்கத் தெரியாதவர். ஆபாச பேச்சுகள் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் டி. என். ஏ. என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் ஜோசப் விஜய் வெளிநாட்டு பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததற்கு அரசியல் நாகரீகம் இன்றி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது. பொறுப்பற்ற முறையில் வரம்பு மீறி பேசி வருவதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தலில் எதிர்க்கட்சி வரிசைக்கான வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. ஒரு புள்ள அரசியல் தலைவர்கள் பேசும் பேச்சில் முதிர்ச்சி இருத்தல் வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் மேடைப்பேச்சுகளை ஏற்க முடியாது. ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசுவது தான் திமுகவின் அரசியல் கலாச்சாரமாக மாறி உள்ளது.
இரட்டை அர்த்தத்தில் பேசக்கூடியவர் உதயநிதி ஸ்டாலின்
திமுகவினர் மேடைகளில் ஆபாசமாக பேசவில்லை என்றால் தான் அது ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் ஆகும். ஆபாச பேச்சு தான் திமுகவின் டிஎன்ஏ. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இரட்டை அர்த்தத்தில் பேசக்கூடியவர் ஆவார். அந்த வழியில் வந்த முன்னாள் அமைச்சர் பி. கே. சேகர்பாபுவின் பேச்சிலும் எந்த அரசியல் அறமும் இல்லை. அவரது பேச்சில் சிறிதும் அறம் இல்லாத ஒருவர் எப்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்திருக்க முடியும் என்று தெரியவில்லை.
மேலும் படிக்க: CM விஜய் கெட்டப்பில் விநாயகர்.. செம மாஸாக செல்ஃபி எடுக்கும் ரசிகர்கள்.. வைரலாகும் ‘விஜய் விநாயகர்’ கொண்டாட்டம்!




மகனை முறையாக வளர்க்க தவறியவர் மு. க. ஸ்டாலின்
திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க. ஸ்டாலினை குறிப்பிட்டு பேசிய அமைச்சர் ரமேஷ், தான் பெற்ற மகனையே ஒழுங்காகவும், முறையாகவும் வளர்க்காத மு. க. ஸ்டாலின் தனது கட்சியினரை எவ்வாறு கட்டுப்பாட்டுடனும், ஒழுங்காகவும் வைத்திருப்பார் என எதிர்பார்க்க முடியும். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தான் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதா. கடந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் 5 ஆண்டு கால ஆட்சியை சற்று திரும்பி பார்க்க வேண்டும்.
முதல்வர்- அமைச்சரை விமர்சித்த திமுக
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனைகளை முறையாக பராமரிக்க தவறிய திராவிட முன்னேற்றக் கழக அரசு மற்றவர்களை விமர்சிப்பதற்கு எந்த தகுதியும் இல்லை என்று தெரிவித்தார். சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், மு. க. ஸ்டாலின் குறித்து கடுமையாக பேசியிருந்தார். இவரது பேச்சை கண்டித்து திமுக தரப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முதல்வர் விஜய், மின்சார துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் ஆகியோரையும், முதல்வர் விஜயின் லண்டன் பயணம் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கடலூரில் பதற்றமான சூழல்.. அம்பேத்கர் சிலை சேதம்.. போலீசாரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!