AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தூய்மை பணியாளருக்கு புகைப்படத்துடன் தபால் தலை வெளியீடு – என்ன காரணம் தெரியுமா?

Honest Act Honoured : சென்னையைச் சேர்ந்த தூய்மை பணியாளர் பத்மா என்பவருக்கு அஞ்சல் துறை தனது புகைப்படத்துடன் கூடிய சிறப்பு தபால் தலையை வெளியிட்டு சிறப்பித்துள்ளது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தூய்மை பணியாளருக்கு புகைப்படத்துடன் தபால் தலை வெளியீடு – என்ன காரணம் தெரியுமா?
தூய்மை பணியாளருக்கு தபால் தலை வெளியீடு
Karthikeyan S
Karthikeyan S | Published: 01 Feb 2026 15:03 PM IST

சென்னை, பிப்ரவரி 1 : சென்னையைச் சேர்ந்த தூய்மை பணியாளர் பத்மா என்பவருக்கு அஞ்சல் துறை தனது புகைப்படத்துடன் கூடிய சிறப்பு தபால் தலையை வெளியிட்டு சிறப்பித்துள்ளது. இதனால் தான் சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சி அடைந்ததாக தூய்மை பணியாளர் பத்மா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதற்கான காரணம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். சென்னை திருவல்லிக்கேணி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பத்மா. இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 11, 2026 அன்று சென்னை தி.நகர் வண்டிப்பாதை பகுதியில் பத்மா பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையோர குப்பை தொட்டிகளுக்கு அருகே பை ஒன்று இருப்பதைப் பார்த்துள்ளார். அந்த பையில் 45 சவரன் அளவுக்கு தங்க நகைகள் இருப்பதை கண்டு பத்மா அதிர்ச்சியடைந்தார். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், அதனை சொந்தமாக்கிக்கொள்ள முயற்சிக்காமல், நேர்மையாக செயல்பட்டு அதனை பாண்டிபஜார் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

முதல்வர் நேரில் அழைத்து பாராட்டு

இந்த நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்த தங்க நகைகள் பரமேஸ் என்பவருக்கு உரியது என தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக பரமேஸ் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரிடம் தங்க நகை ஒப்படைக்கப்பட்டன. இந்த நிலையில் பத்மாவின் செயல் செய்திகளில் வெளியான நிலையில், சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. அவர் பலருக்கும் முன்னுதாரணமாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தூய்மை பணியாளரின் பெயரில் தபால் தலை வெளியீடு

இந்த நிலையில் பத்மாவின் நேர்மையான செயலை பாராட்டிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் அழைத்து ரூ.1 லட்சத்திற்கான காசோலை வழங்கி கௌரவித்தார். இதனையடுத்து அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரிடமிருந்து பாராட்டுகள் குவிந்தன.

இந்த நிலையில் தான் தபால்துறை சார்பில் சென்னை மத்திய தபால் கோட்டம், பத்மாவின் புகைப்படத்துடன் கூடிய சிறப்பு தபால் தலையை வெளியிட்டு அவரை கௌரவித்தது. மேலும், பத்மாவின் பெயரில் தபால் வங்கியில் பிரீமியம் கணக்கு தொடங்கப்பட்டு அவருக்கு ரூ.15 மதிப்பில் விபத்து காப்பீடு செய்யப்பட்டு அதற்கான ஆவணங்களும் வழங்கப்பட்டன. இது தனக்கு சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், தான் எப்பொழுதும் நேர்மையாக இருப்பேன் என்றும் அதற்கான பலன் தான் இந்த கௌரவம் என்றும் பத்மா தெரிவித்தார்.

Follow Us