Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மயக்க மருந்து கொடுத்து தங்க நகை திருட்டு… சென்னை அரசு மருத்துவமனை செவிலியர் கைது

Nurse arrested for drugging colleague: சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஒருவர் தனது சக ஊழியருக்கு காளான் சூப்பில் மயக்க மருந்து கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அவர் ஏற்கனவே மற்றொரு ஊழியரிடமும் இதே போல கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்தது.

மயக்க மருந்து கொடுத்து தங்க நகை திருட்டு… சென்னை அரசு மருத்துவமனை செவிலியர் கைது
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Jan 2026 18:19 PM IST

சென்னை, ஜனவரி 13 : சென்னையில் அரசு மருத்துவமனையில் (Government Hospital) பணியாற்றும் செவிலியர் ஒருவர், சக ஊழியருக்கு மயக்க மருந்து கொடுத்து தங்க நகை (Gold Chain) திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை காவல் நிலைய போலீசார், அரசு மருத்துவமனை செவிலியரான நான்சி நிஷா என்பவரை கைது செய்துள்ளனர். இவர் தண்டந்தார் நகர் பகுதியைச் சேர்ந்தவர்.இவர் எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் செவிலியர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இவர் தனது சக ஊழியருக்கு காளான் சூப்பில் மயக்க மருந்து கொடுத்து அவரது நகையை கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மயக்க மருந்து கொடுத்து சக ஊழியரின் நகை திருட்டு

இது தொடர்பாக காவல்துறையினர் தெரிவித்த தகவலின்படி, கடந்த 2025 அக்டோபர் 10 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. குடும்ப பிரச்னைகளால் மன அழுத்தத்தில் இருந்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுனிதாவை, நான்சி நிஷா தன் வீட்டிற்கு வருமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சைதாப்பேட்டையில் உள்ள நான்சி நிஷாவின் வீட்டிற்கு சென்ற சுனிதாவுக்கு, அவர் காளான் சூப் வழங்கியுள்ளார்.

இதையும் படிக்க : கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரவுடி கொல்லப்பட்ட சம்பவம்…4 போலீசார் மீது பாய்ந்த நடவடிக்கை!

அந்த சூப்பை குடித்த பிறகு சுனிதா மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாலை 7 மணி அளவில் சுயநினைவு திரும்பிய போது, அவசரமாக வெளியே செல்ல வேண்டும் என கூறி, சுனிதாவை பைக்கில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் நடந்த விசாரணையில், அந்த சூப்பில் நான்சி நிஷா மயக்க மருந்தை கலந்து கொடுத்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, கடந்த ஜனவரி 12, 2026 அன்று நான்சி நிஷாவை போலீசார் கைது செய்தனர். கைதுக்குப் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில், திருடப்பட்ட சுமார் 48 கிராம் தங்கச் சங்கிலியை உருக்கி தங்க கட்டியாக மாற்றி, வியாசர்பாடியில் உள்ள ஒரு அடகு கடையில் அடகு வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த தங்கம் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இதே போன்ற குற்றச்செயலில் ஈடுபட்ட செவிலியர்

மேலும் விசாரணையில், நான்சி நிஷாவுக்கு எதிராக இதேபோன்ற மற்றொரு குற்றச்சாட்டும் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2025 நவம்பர் 15 ஆம் தேதி, அதே மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் தங்கம்மாள் என்பவருக்கு மயக்க மருந்து கலந்த கூல்டிரிங்ஸ் கொடுத்துள்ளார். இதனயைடுத்து மயங்கிய தங்கம்மாளை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்புவதாக கூறி ஆட்டோவில் அழைத்துச் சென்ற நான்சி நிஷா, பயணத்தின் போது சுமார் 4.75 சவரன் எடையுள்ள தாலி சங்கிலியை திருடியதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : நகை கடைகளுக்கு ஹிஜாப் அணிந்து வர தடையா? தமிழ்நாடு ஃபேக்ட் செக் சொன்ன விளக்கம் என்ன?,

அந்த வழக்கில் நான்சி நிஷா கைது செய்யப்பட்டு, கடந்த வாரம் தான் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். தற்போது மீண்டும் தனது சக ஊழியருக்கு காளான் சூப்பில் மயக்க மருந்து கலந்துகொடுத்து நகை திருடிய வழக்கில் நான்சி நிஷாவை கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.