Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சாலையில் சென்றபோது திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து.. புதுச்சேரியில் பரபரப்பு சம்பவம்!

Puducherry Bus Fire Accident | நேற்று (ஜனவாரி 12, 2026) புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுக்கொண்டு இருந்துள்ளது. இந்த பேருந்து சாலையில் சென்றுக்கொண்டு இருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், பெரும் பதற்றம் ஏற்பட்டது.

சாலையில் சென்றபோது திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து.. புதுச்சேரியில் பரபரப்பு சம்பவம்!
தீப்பிடித்து எரிந்த பேருந்து
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 13 Jan 2026 08:22 AM IST

புதுச்சேரி, ஜனவரி 13 : புதுச்சேரியில் (Puducherry) இருந்து பொள்ளாச்சிக்கு (Pollachi) தனியார் பேருந்து ஒன்று நேற்று (ஜனவரி 12, 2026) இரவு 10 மணிக்கு புறப்பட்டு கடலூர் (Cuddalore) நோக்கி சென்றுக்கொண்டு இருந்துள்ளது. அப்போது அந்த பேருந்து முதலியார்பேட்டை 100 அடி சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தை கடந்து இறங்கியபோது, பின்னால் வந்துக்கொண்டு இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பேருந்து ஓட்டுநருக்கு சைகை காட்டியுள்ளார். அதாவது அவர் பேருந்தை நிறுத்துமாரு பேருந்து ஓட்டுநருக்கு சைகை காட்டியுள்ளார்.

சாலையில் சென்ற பேருந்து திடீர் தீ விபத்து

அதனை கண்டு பேருந்து ஓட்டுநர், பேருந்தை நிறுத்திய நிலையில் அவர் பேருந்து தீப்பிடித்தது குறித்து கூறியுள்ளார். சிறிது நேரத்தில் பேருந்து எரிவது குறித்து பயணிகளுக்கு தெரிய வந்த நிலையில், பேருந்தில் பயணம் செய்துக்கொண்டு இருந்த 13 பயணிகள் அலறி அடித்துக்கொண்டு கீழே இறங்கியுள்ளனர். அப்போது ஒரு சில நொடிக்ளிலேயே பேருந்து முழுவதுமாக தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க : ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம்…களமிறங்கிய சிறப்பு குழு- புகார் எண்கள் அறிவிப்பு!

முற்றிலும் எரிந்து சேதமான பேருந்து

பேருந்து தீப்பற்றி எரிவது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைக்க போராடியுள்ளனர். ஆனால், பேருந்து முற்றிலுமாக தீயில் கருகி சாம்பலாகியுள்ளது. இதன் காரணமாக பேருந்தில் பயணம் செய்த பொதுமக்களின் உடமைகளும் முற்றிலுமாக சேதமாகியுள்ளன.

இதையும் படிங்க : திமுக கூட்டணியில் பாமக இணைய வாய்ப்புள்ளது….அமைச்சர் ராஜகண்ணப்பன்!

பேருந்து இயக்கத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து

பேருந்து இயக்கத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசாரின் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கொழுந்து விட்டு எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் எப்படியோ போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனால், தீ விரைவாக பேரும்து முழுவதும் பரவி முற்றிலுமாக எரிந்து சேதமாகியுள்ளது.

உரிய நேரத்தில் ஆட்டோ ஓட்டுநர் அளித்த தகவலின்படி எந்த வித உயிர் சேதமும் இல்லாமல் பேருந்தில் இருந்த அனைவரும் காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.