ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம்…களமிறங்கிய சிறப்பு குழு- புகார் எண்கள் அறிவிப்பு!
Omni Buses High Fares Complain Numbers : தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் புகார் எண்கள் மற்றும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் வாரியாக செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன .
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15- ஆம் தேதி ( வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் பயணம் மேற்கொள்வார்கள். இதற்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல, தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான முன்பதிவுகளும் தொடங்கி இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தனியார் ஆம்னி பேருந்துகளும் பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஆம்னி பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தென் மாவட்டங்களுக்கு கூடுதல் கட்டணம்
அதன்படி, சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ. 4 ஆயிரமும், திருநெல்வேலிக்கு ரூ.4,500 கூடுதல் கட்டணமாக வசூலிப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு, பல்வேறு பகுதிகளுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் அளிப்பதற்காக இலவச தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கு…டிஜிபி-யிடம் சிபிஐ அதிகாரிகள் அதிரடி விசாரணை!
மாவட்டம் வாரியாக புகார் எண்கள்
அதன்படி, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் சென்னை- 18004256151, இணைப் போக்குவரத்து ஆணையரகம் (தெற்கு)- 97905 50051, துணை போக்குவரத்து ஆணையரகம் ( விழுப்புரம்)- 9677398925, இணைப் போக்குவரத்து ஆணையரகம் ( மதுரை)-9005366394, துணை போக்குவரத்து ஆணையரகம் ( வேலூர்)-9840023011, இணை போக்குவரத்து ஆணையரகம் ( கோயம்புத்தூர்) – 912359371 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
சேலம்-திருச்சிராப்பள்ளி மாவட்டத்துக்கு…
இதே போல, துணை போக்குவரத்து ஆணையரகம் ( சேலம்)- 7845636423, துணை போக்குவரத்து ஆணையரகம் (திருச்சிராப்பள்ளி) – 9066032343, துணை போக்குவரத்து ஆணையரகம் ( ஈரோடு) – 8056940040, துணை போக்குவரத்து ஆணையரகம், (விருதுநகர்) – 9025723800, துணை போக்குவரத்து ஆணையரகம் (தஞ்சாவூர்) 9585020865, துணை போக்குவரத்து ஆணையரகம் (திருநெல்வேலி) 9698118011 ஆகிய செல்போன் எண்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் வாட்ஸ் ஆப் மூலமாகவோ, அழைப்பின் மூலமாகவோ, குறுஞ்செய்தி மூலமாகவே புகார் தெரிவிக்கலாம்.
கூடுதல் கட்டணத்தை தடுக்கு சிறப்பு குழு
மேலும், தமிழ்நாடு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், போக்குவரத்து சோதனை சாவடி ஆய்வாளர்கள் ஆகியோர் மூலம் சிறப்பு குழு அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் விதமாக ஆய்வு செய்து வருகின்றனர். இதில், அதிக அளவிலான கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது அபராதம் விதித்தும், பேருந்துகளை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: திமுக கூட்டணியில் பாமக இணைய வாய்ப்புள்ளது….அமைச்சர் ராஜகண்ணப்பன்!



