Gold Loan : தங்க நகை கடன்.. குறைந்த வட்டி வழங்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!
Banks Provides Lowest Interest Rates for Gold Loans | இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகள் தங்க நகை கடன் வழங்குகின்றன. இந்த நிலையில், குறைந்த வட்டி விகிதத்தில் தங்க நகை கடன் வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் எதிர்பாராத பண தேவைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதாவது மருத்துவம், கல்வி, குடும்ப செலவுகள் என பல வகையில் மனிதர்களுக்கு பண தேவை ஏற்படும். ஆனால், அனைத்து பொதுமக்களும் இத்தகைய அத்தியாவசிய தேவைகளுக்காக தனியாக பணத்தை எடுத்து வைப்பது கிடையாது. மாறாக அவர்கள் தங்களிடம் உள்ள தங்க நகைகளை அடகு வைத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்கின்றனர். பெரும்பாலான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்க நகை கடன் (Gold Loan) வழங்கும் நிலையில், எந்த எந்த வங்கிகள் குறைந்த வட்டிக்கு தங்க நகை கடன் வழங்குகின்றன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
குறைந்த வட்டியுடன் தங்க நகை கடன் வழங்கும் வங்கிகள்
தங்க நகை கடன்களுக்கு குறைந்த வட்டி வழங்கும் வங்கிகளின் விவரம் குறித்து பின்வருமாறு பார்க்கலாம்.
பஞ்சாப் நேஷனல் வங்கி – பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) தங்க நகை கடனுக்கு ஆண்டுக்கு 8.35 சதவீதம் வட்டி விதிக்கிறது.




இந்தியன் வங்கி – இந்தியன் வங்கி (Indian Bank) தங்க நகை கடனுக்கு ஆண்டுக்கு 8.75 சதவீதம் வட்டி விதிக்கிறது.
கனரா வங்கி – கனரா வங்கி (Canara Bank) தங்க நகை கடனுக்கு ஆண்டுக்கு 8.75 சதவீதம் வட்டி விதிக்கிறது.
கோடக் மஹிந்திரா வங்கி – கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank) தங்க நகை கடனுக்கு ஆண்டுக்கு 8.75 சதவீதம் வட்டி விதிக்கிறது.
எச்டிஎஃப்சி வங்கி – எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) தங்க நகை கடனுக்கு ஆண்டுக்கு 9.30 சதவீதம் வட்டி விதிக்கிறது.
இதையும் படிங்க : Aadhaar : இனி ஆதாரில் மிக சுலபமாக பெயர், பிறந்த தேதியை மாற்றலாம்.. விரைவில் வரும் இ ஆதார் செயலி!
குறைந்த வட்டியில் தங்க நகை கடன் வாங்குவது ஏன் அவசியம்?
குறைந்த வட்டி கொண்ட தங்க நகை கடன் வாங்குவது அதிக லாபம் உள்ளதாக கருதப்படுகிறது. காரணம், அதிக வட்டி கொண்ட திட்டங்களில் கடன் வாங்கும்போது அதிக பணத்தை வட்டியாக செலுத்த வேண்டும். ஏற்கனவே பண தேவை உள்ள உங்களுக்கு இது கூடுதல் சுமையை வழங்கும். இந்த நிலையில், குறைந்த வட்டி கொண்ட தங்க நகை கடனை நீங்கள் வாங்கும்போது உங்களுக்கு பெரிய அளவிலான நிதி இழப்பு ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.